Dragon (தமிழ்)

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியிருக்கிற `டிராகன்’ திரைப்படம் இன்று (பிப் 21) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் அனுபமா, கயாடு லோகர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இயக்குநர்களான மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மரியம் ஜார்ஜ், யூடியூப் பிரபலங்களான வி.ஜே.சித்து, ஹர்ஷத் கான் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். காலேஜில் ஜாலியாக, கெத்தாக சுற்றித் திரியும் இளைஞர் வாழ்க்கையின் காதல், பிரேக் அப், கரியர், குடும்பத்தின் நிலை பற்றி ஜாலியாகப் பேசியிருக்கிறது இப்படம்.
NEEK (தமிழ்)
நடிகர் தனுஷ், ‘பவர் பாண்டி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இதையடுத்து ‘ராயன்’ படத்தை இயக்கியிருந்தார். தற்போது தனுஷ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படம் இன்று (பிப் 21) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இப்படத்தின் மூலம் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உட்பட பலர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.
ராமம் ராகவம் (தமிழ்)
தன்ராஜ் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியிருக்கிற `ராமம் ராகவம்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. தந்தை, மகனுக்கிடையே நடக்கும் சண்டை, பாசப் போராட்டத்தை மையமாகக் கொண்ட திரைப்படம் இது.
பிறந்த நாள் வாழ்த்துகள் (தமிழ்)

ராஜூ சந்திரா இயக்கத்தில் ‘வெண்ணிலா கபடி குழு’ அப்பு குட்டி, ஶ்ரீஜா ரவி, ஐஸ்வர்யா, சந்தோஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘பிறந்த நாள் வாழ்த்துகள்’. சமூகக் கருத்துடன் அமைந்துள்ள காமெடி திரைப்படமான இது இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
Get-Set Baby (மலையாளம்)

வினய் கோவிந்த் இயக்கத்தில் உன்னி முகுந்தன், நிகிலா விமல், செம்பன் வினோத், அபிராம் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘Get-Set Baby’. செயற்கைக் கருத்தரித்தல் டாக்டராக இருக்கும் உன்னி முகுந்தனின் வாழ்வில் நடக்கும் மனம் நெகிழக வைக்கும் கதை என்கிறது படக்குழு. இத்திரைப்படம் இன்று (பிப் 21) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
Officer on Duty (மலையாளம்)

ஜித்து அஸ்ரஃப் இயக்கத்தில் குஞ்சாக்கோ போபன், பிரியாமணி, ஜெகதீஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘Officer on Duty’. க்ரைம், திரில்லர் திரைப்படமான இது இன்று (பிப் 21) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
Mere Husband Ki Biwi (இந்தி)

முதாசர் அசிஸ் இயக்கத்தில் அர்ஜுன் கபூர், பும்மி, ரகுல் பிரீத் சிங், ஹர்ஷ் குஜ்ரால் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘Mere Husband Ki Biwi’. ஜாலியான முக்கோணக் காதல் கதை திரைப்படமான இது இன்று (பிப் 21) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
Babygirl (ஆங்கிலம்)

ஹரினா ரெய்ஜின் இயக்கத்தில் நிக்கோல் கிட்மேன், ஹாரிஸ் டிக்கிஸ்சன், ஆண்டனியோ, ஷோபியா வைல்டி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘Babygirl’. ரொமாண்டிக் திரில்லர் திரைப்படமான இது இன்று (பிப் 21) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.