Good Bad Ugly (தமிழ், தெலுங்கு, இந்தி)
“மார்க் ஆண்டனி’ படத்தை இயக்கி ஹிட் கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் திரைப்படம் ‘Good Bad Ugly’. சிம்ரன், த்ரிஷா, பிரபு, யோகி பாபு, அர்ஜுன் தாஸ், சுனி உள்ளிட்டோர் இதில் நடித்திருக்கின்றனர். அஜித் ரசிகர்களுக்கென பல கெட்டப்களில், பக்காவான பொழுதுபோக்குத் திரைப்படமாக உருவாகியிருக்கும் இத்திரைப்படம் நாளை (ஏப்ரல் 10) திரையரங்குகளில் வெளியாகிறது.
Alappuzha Gymkhana (மலையாளம், தமிழ்)
காலித் ரஹ்மான் இயக்கத்தில் நாஸ்லன் கஃபூர், லுக்மான், பேபி ஜீன், கணபதி, சந்தீப் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Alappuzha Gymkhana’. குத்துச் சண்டையில் சாதிக்க துடிக்கும் நண்பர்களின் காதல், குச்சுச் சண்டை, வாழ்க்கைப் போராட்டத்தை மையமாகக் கொண்ட இத்திரைப்படம் நாளை (ஏப்ரல் 10) திரையரங்குகளில் வெளியாகிறது.