தியேட்டர் டு ஓடிடி
டிராகன் (தமிழ்)
பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயடு லோஹர், மிஷ்கின், கௌதம் மேனன், கே எஸ் ரவிக்குமார், வி ஜே சித்து ஆகியோரது நடிப்பில் உருவாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றத் திரைப்படம் தான் டிராகன். அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருந்த இந்த திரைப்படம், ஒருவன் வாழ்க்கையில் செய்த தவறில் இருந்து தப்பிக்க முடியாது என்ற நெறியை மையமாகக் கொண்டுள்ளது. இந்த திரைப்படம் நெட்ஃபிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது.
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் (தமிழ்)

நடிகர் தனுஷின் இயக்கத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ் ஆகியோரின் நடிப்பில் உருவான திரைப்படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். தற்கால காதலை மையமாக வைத்து உருவான இத்திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகியுள்ளது.