Kesari Chapter 2: The Untold Story of Jallianwala Bagh (இந்தி)

கரண் சிங் இயக்கத்தில் அக்ஷய் குமார், ஆர். மாதவன், அனன்யா பாண்டே உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Kesari Chapter 2: The Untold Story of Jallianwala Bagh’. ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பிரிட்டிஷை எதிர்த்து நீதி கேட்டுப் போராடிய சங்கரன் நாயர் என்பவரின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
Widow’s Shadow (இந்தி)
சுமன் ஆதிக்ரே இயக்கத்தில் சங்கலிட்டா ராய், பலக் கயத், பல்லவி பட், நந்திதா புரோகித், பிரத்விராஜ் தேசாய் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Widow’s Shadow’. கணவனின் கொடுமையால் பாதிக்கப்பட்டு கணவனை இழந்தப் பெண், தன் வாழ்வை தனது பெண் தோழியுடன் புத்துயிர்ப்புப் பெறச் செய்து மகிழ்ச்சியாக வாழத்தொடங்குகிறார். இரு பெண்களிடையேயும் காதல் மலர, அந்தக் காதலுக்கு சமூகம் எப்படியெல்லாம் எதிர்ப்புத் தெரிவிக்கிறது என்பது பற்றியும், இரு பெண்களுக்கிடையேயான காதல், குடும்ப வன்முறைகள் பற்றியும் பேசும் இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.