கணினி என்றால் என்ன? | What is a computer

கணினி என்பது(What is a computer) கணிப்பொறி (Computer) என்பதன் சுருக்கம். இந்த கணினி எப்படி செயல்படுகிறது? அதன் இயக்கம் பற்றிய புரிதல்கள் இக்கட்டுரையை வாசிப்பதன் மூலம் உங்களுக்கு கிடைக்கும்.

நாம் தரும் உள்ளீடுகளை (Input) பெற்று, அதற்கு தகுந்த மாற்றங்களை உள்ளே செயல்படுத்தி (Process) நாம் என்ன எதிர்பார்க்கிறோமோ அதற்கு தகுந்த வெளியீடுகளை கொடுப்பதுதான் மின்னணு சாதனமான கணினி/கணிப்பொறி என்ற கம்ப்யூட்டர்.

இதில் குறிப்பிடப்படும் சில வார்த்தைகள் மற்றும் அதன் பொருளினை ஆங்கிலம் – தமிழ் என்ற வழியில் காண்போம்.

●   உள்ளீட்டு கருவி (input device) 
●   மைய செயல்பாட்டு பகுதி (central processing unit)
●   நினைவகம் (ram)
●   வெளியீட்டு கருவி (output device)

உள்ளீட்டு கருவி (input device)

இதென்ன உள்ளீட்டு கருவி? கேள்வி வருகிறதல்லவா? கணிக்கு உள்ளே நாம் நினைப்பவற்றை உட்செலுத்த உதவும் ஒரு சாதனம் தான் அது. அதைத்தான் உள்ளீட்டுக் கருவி என்கிறோம். உதாரணமாக கணிப்பொறியோடு இணைந்திருக்கும் விசைப்பலகை (Keyboard), சுட்டெலி (Mouse)

வெளியீட்டுக் கருவி (Output Device)

நாம் கணினியில் உட்செலுத்தும் விடயங்களை (?) அது புரிந்துகொண்டு, அதற்கேற்ற செயல்பாட்டினை மேற்கொண்டு, அது தரும் விடைகளை (Output) நாம் காணும் வகையில் கொடுக்க க்கூடிய சாதனம் தான் வெளியீட்டுக் கருவி. நம் கண் முன்னே மேசையின் மீது ஒளிரும் கணினித்திரை (Monitor), நம் கண்ணால் பார்க்க க்கூடிய நகல்களை கொடுக்கூடிய பதிவெடுக்கும் கருவி (Printer) போன்றவற்றினை வெளியீட்டுக் கருவி என்கிறோம்.

மைய செயலகம் (CPU)

What is a computer
What is a computer

ஆம். மைய செயலகம் என்பது சரியான வார்த்தைதான். கணினியின் மையமாக இருந்து (மய்யம் அல்ல.. ஹி..ஹி..) செயல்படுவதால் இதனை மையச் செயலகம் (Centeral Processing Unit ) என்கிறோம்.
இதென்ன செய்யும்? இதன் பணி என்ன என்ற இரு கேள்விகளுக்கு விடைகளை இங்கு பார்ப்போம்.
நாம் உள்ளீட்டுக் கருவியின் மூலம் கொடுக்கும் Input களை வாங்கி, அதை கணினி மொழியில் புரிந்துகொண்டு, அதை செயல்படுத்தி, சரியான வெளியீடுகளை கொடுக்கும் பணியைச் செய்கின்ற கணினியின் முதன் முக்கியமான பாகம் இது. ஒற்றை வார்த்தையில் சொல்வதானால் “மூளை”. அந்த மூளை செயல்படுவதற்கு தேவையான பகுதி பொருட்கள் அங்கே உள்ளேயே இருக்கும். அந்த பொருட்கள் என்னென்ன என்றால்,
●   Processor
●   Ram
●   Hard Disk
●   SMPS
●   Cooler Fan
போன்றவைகள் இருக்கும். இவற்றைத் தாங்கி, ஒருங்கிணைப்பது MOTHER BOARD என்ற பலகம். இது அனைத்தையும் ஒருங்கிணைப்ப பயன்படுவதால் தான் இதனை கணினியின் தாய் என்றழைக்கின்றனர். ஏனென்றால் இதில் பல குட்டி குட்டி (குழந்தைகள்) பாகங்கள் அனைத்தும் இணைக்கப்பட்டு, ஒரு கணினி செயல்படுவதற்குத் தேவையான அனைத்து பாங்களையும் ஒருங்கிணைக்க உதவுகிறது.
சரி.. இதில் குறிப்பிடப்படும் பகுதி பொருட்களைப் பற்றி அறிந்துகொள்வோம். என்ன நண்பர்களே சற்றே சலிப்பாக இருக்கிறதா? ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டுமென்றால் அதிக ஈடுபாடு நமக்கு வேண்டும். ஒரு முறை அல்லது இருமுறை அல்லது சில முறை தொடர்ந்து ஒன்றை பற்றிய தேடுதல், ஆழ்ந்து யோசித்தல், நிதானமாக புரிந்துகொள்ளுதல் இருந்தால் நாம் மலையை கூட கடுகு போல நினைத்திடலாம். அவ்வளவு எளிமையானதுதான் ஒவ்வொரு செயலும்.
சரி.. ரொம்ப போர் அடிச்சா ஒரு டீ குடிச்சிட்டு வாங்க. ஒரு 5 நிமிசம் வெயிட் பன்றேன். என்ன முடிச்சிட்டீங்களா? இப்போ பாடத்துக்கு போவோம்.

ப்ராசசர்/Processor

கணினியில் இந்த பகுதி உறுப்பு மிக முக்கியமானது. நாம் கொடுக்கும் அனைத்து உள்ளீடுகளையும் பெற்று, புரிந்துகொண்டு செயல்படுத்துவது இந்த கணினி உறுப்புதான். மிக பிரதானமான ஒன்று. இது எவ்வளவு வேகத்தில் நம் இன்புட்களை பரிசீலிக்கிறது தெரியுமா?
ஜிகா ஹெர்ட் என்ற அளவையில் இதன் வேகம் குறிப்படுகிறது. இதற்கு ஒரு நண்பன் இருக்கிறான். உதவியாளர் என்று கூட சொல்லலாம். அதுதான் நினைவகம் என குறிப்பிடப்படுகிற RAM.

நினைவகம்/RAM

இது ஒரு நினைவகம். ஆம்.. நீங்கள் நினைப்பது போலதான் நமக்கு எப்படி மூளையில் ஒரு குறிப்பிட்ட பகுதி நினைவகமாக செயல்படுகிறதோ அதுபோல இதுவும் செயல்படும். இது தன் நண்பன் பிராச சர் உடன் இணைந்து மட்டும் செயல்படும்.

எப்படி என்றால், நம் உள்ளிடும் உள்ளீடுகளை பெற்று, அதனை தன் நண்பன் ப்ராச்சருக்கு கொடுக்கும். Processor அதனை செயல்படுத்தும். ரேமின் நினைவகத் திறனை குறிப்பிட ஜிகாபைட் (GB) என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது. ஒரு லிட்டர் வாட்டர் பாக்ஸ், அரை லிட்டர் வாட்டர் பாக்ஸ் என்பது போல நினைவகத்தின் கொள்ளவை குறிப்பிட, உதாரணமாக 2GB RAM, 4GB RAM, 8GB RAM.

இதனை தற்காலிக நினைவகம் என்றும் குறிப்பிடுவர். ஏனென்றால் கணினி இயக்கத்தில் இருக்கும்போது மட்டுமே இது செயல்பட்டு, பிராச்சருக்கு உதவும். இயக்கத்தில் இல்லாத போது இதில் எந்த தகவல்களும் சேமிப்பில் இருக்காது.

நினைவகம்/வன்வட்டு/Hard Disk

கணினியில் நாம் சேமிக்கும் அனைத்துவிடமான தகவல்கள் (Data) இதில்தான் சேமிக்கப்படும். அந்த தகவல்கள் அனைத்தையும் மீண்டும் தேவையானபோது எடுத்துப் பயன்படுத்தலாம். இதனை நிரந்தர நினைவகம் என்றும் குறிப்பிடலாம்.

வன்வட்டினை போன்று நிரந்தரமாக DATA வினை சேமிக்க சில Storage Device கள் உண்டு. அவைகள் நாம் அன்றாடம் பயன்படுத்தும் Pen Drive, CD, SD Card போன்றவைகள். இவற்றை அனைத்தையும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக எடுத்துச் செல்லலாம். எனவேதான் இவற்றினை Movable Stroage Device என்கின்றனர்.

பொதுமக்கள் இவற்றினை தகவல் சேமிப்பான்களாக பயன்படுத்துகின்றனரோ இல்லையோ, பொழுது போக்கு அம்சங்களை கொண்ட சினிமா, பாட்டு, கேம்ஸ் போன்றவற்றை காண அடிக்கடி பயன்படுத்துகின்றனர். சரி.. இதுவரையிலும் ஒரளவிற்கு கணினி மற்றும் அதன் பாகங்கள் குறித்து ஒரு தெளிவு பிறந்திருக்கும் என்று நினைக்கின்றேன்.

கணினி எப்படி செயல்படுகிறது?

இதற்கு முன்பு பார்த்தவைகள் அனைத்துமே நாம் கண்ணுற காண்பவைகள் பற்றித்தான். கணினி மற்றும் அதன் பாகங்கள். அதாவது கணினியின் உடல் பற்றிய தகவல்கள். இனி காணப் போவது/தெரிந்துகொள்ள போவது கணினியின் உயிர் பற்றி. அதுதான் கணினியை உயிர்ப்புடன் செயல்பட வைக்கப் போகும் முக்கியமான ஒன்று. அது என்ன?

Operating System – இதுதான் கணினியின் உயிர். இது இருந்தால் மட்டுமே கணினியை இயங்க வைக்க முடியும். என்னாதான் கணினி மின்சாரத்துடன் இணைக்கப்பட்டு, அதன் பாகங்களுக்கு மின்சாரம் செலுத்தப்பட்டாலும், இது மட்டும் இல்லையென்றால் அத்துணை பாகங்களையும் இயக்க வைக்க முடியாது. அதனால்தான் இதனை இயங்குதளம்/Operating System என்கின்றோம்.. சுருக்கமாக OS.

எப்பொழுதாவது கேட்டிருப்பீர்கள்.. ஓ.எஸ். போயிருச்சி.. ஓ.எஸ் போயிருச்சி என்று கணினி/லேப்டாப் வைத்திருப்பவர்கள் கூறியிருப்பார்கள். அதன் உண்மையான பொருள் என்னவென்றால் கணினியின் உயிர் போய்விட்டது என்பதுதான்.

கணினியின் இதயத்துடிப்பாக செயல்படும் இந்த OS பயனர் (நாம்) மற்றும் கணிப்பொறிக்கு இடையில் ஒரு பாலமாக செயல்படுகிறது. இது கணினியின் அனைத்து செயல்பாடுகளும் சரியான முறையில் இயங்க வழி செய்கிறது.

ஆபரேட்டிங் சிஸ்டம் – சில வகைகள்

●   Windows
●   Dos
●   Linux
●   Unix

இவை அனைத்தும் ஒரு கணினியை செயல்படுத்திட உதவுபவைதான். இதில் Windows Operating System முதன்மையானது. உலகின் மிக பெரும்பாலானோர் இதனை பயன்படுத்திகின்றனர். இதன் பயனர் இடைமுகம் (User Interface) மிக எளிமையானது. ஆபரேட்டிங் சிஸ்டத்தை பற்றி எழுத வேண்டுமென்றால் கடலளவு எழுதலாம். இது கட்டுரையின் நோக்கமல்ல. விட்ட இடத்தில் தொடர்வோம்.

இனி சொல்லப்போகும் விடயங்களில் உங்களுக்கு இலேசான குழப்பத்தை உருவாக்க முயற்சிக்கலாம். பயந்துவிடாதீர்கள். மிக தெளிவாக புரியும்படி கூறுகிறேன். நாம் பார்த்திட்ட கணினி உறுப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட வைக்கும் மென்பொருள்/சாப்ட்வேர் Operating System.

ஆப்பரேட்டிங் சிஸ்டம் – வேலை

இந்த ஆபரேட்டிங் சிஸ்டம் கணினியில் பல வேலைகளை மேலாண்மை செய்கிறது. அவைகள் என்னென்ன என தெரிந்துகொள்வோம்.

●   உள்ளீடு / வெளியீடு (Input/ Output)
●   நினைவக (Memory) மேலாண்மை
●   பணி (Task) மேலாண்மை
●   பைல் மேலாண்மை

கீபோர்டு, மானிட்டர், பிரின்டர் போன்ற ஹார்ட்வேர் உறுப்புக் களைக் கண்காணித்து அவற்றிடம் வேலை வாங்குவது ஆப்பரேட்டிங் சிஸ்டமே. இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்கும். ஏன் ஆபரேட்டிங் சிஸ்டத்தை கம்ப்யூட்டரின் இதயம்/உயிர் என குறிப்பிடுகிறோம் என்பது. உங்களது கணினியில் நினைவகத்திறனை உணர்ந்து அதற்கேற்ப அவற்றை பயன்படுத்திக்கொள்ளும்.

மேலும் நாம் டைப் செய்யும் தகவல்கள், சேமிக்கும் தரவுகள் (Data) போன்றவற்றை ஹார்ட் டிஸ்கில் சேமிப்பதற்கான இடம் போன்றவற்றை ஆபரேட்டிங் சிஸ்டம் தீர்மானிக்கிறது. இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட புரோகிராம்கள் இயக்க முடியும். இதனை Multitask என அழைப்பார்கள். இதுபோன்ற ஒரே நேரத்தில் பல பணிகள் செய்திடும்பொழுது, அவற்றை ஒழுங்குபடித்தி, சிக்கல் இல்லாமல் முடித்திட வழிவகை செய்கிறது.

நாம் உருவாக்கிய கோப்புகள், சேமிக்கும்(What is a computer) தகவல்கள் அனைத்தையும் ஆபரேட்டிங் சிஸ்டம் பராமரிக்கும். மேலும் ஆபரேட்டிங் சிஸ்டத்தை சில பிரிவுகள் உள்ளன. அவற்றை சுருக்கமாக மட்டும் இங்கு தெரிந்துகொள்வோம். அதிகமான தகவல்களை ஒரே நேரத்தில் கட்டுரைகளில் வெளியிடும்போது உங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும். ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே பணிபுரியக்கூடிய ஆபரேட்டிங் சிஸ்டம் உண்டு. உதாரணம் Windows Dos. ஒரே நேரத்தில் பல பயனர் ஒரு கணினியில் பணிபுரியக்கூடிய ஆபரேட்டிங் சிஸ்டம் உண்டு. உதாரணங்கள்: யுனிக்ஸ், லினக்ஸ், விண்டோஸ் என்டி ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் இதற்கான எடுத்துக்காட்டுக்களாகும். இது பற்றி தனிப் பதிவில் விரிவாக தெரிந்துகொள்வோம்.

#What is a computer | #History of computers | #Types of computers | #Computer functions |#Uses of computers | #Basic knowledge of computers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *