தர்பூசணி – Watermelon benefits in tamil
தர்பூசணி என்பது ஒரு இனிமையான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் குறைந்த கலோரி கொண்ட கோடை கால பழமாகும். இதில் அதிகமான நீர் சத்து மற்றும் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கொண்டது இந்த தர்பூசணி.watermelon benefits in tamil

தர்பூசணியில் 90% தண்ணீரை கொண்டது. இது கோடையில் ஏழை எளிய மக்களுக்கு சிறந்த பழமாக இருக்கிறது. இந்த பழம் இயற்கையாகவே நீர் மற்றும் இனிப்பை கொண்டது. தர்பூசணியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன.
தர்பூசணியில் இரும்புச் சத்துக்கள் அதிமாக இருப்பதால் இது நம் உடலுக்கு அதிக நன்மையை கொடுக்கிறது. தர்பூசணிக்கு இன்னொரு பெயரும் உண்டு அது என்வென்றால் இயற்க்கை வயகரா ஆகும். ஏன் இதை இயற்கை வயகரா என்று சொல்கிறார்கள் என்றால் அரியவகை சிட்ருலின் புரதச்சத்து அதிக அளவில் இருப்பதனால் இதை இயற்கை வயகரா என்று பொருள் வந்தது.
watermelon benefits in tamil
தர்பூசணி சாகுபடி

நாம் சாப்பிடும் தர்பூசணி நவம்பர் மாதத்தில் சாகுபடி செய்து ஜனவரி மாதத்தில் சந்தைக்கு வருகிறது. ஜனவரி முதல் கோடை காலம் முடிந்து ஜூன்
மாதம் வரை சந்தையில் விற்கப்படுகிறது. தர்பூசணியின் சாகுபடி காலம் 90 நாட்கள் ஆகும். மற்றும் தர்பூசணியின் எடையானது குறைந்தது 8 முதல் 12 கிலோ வரை இருக்கும்.
தர்பூசணியில் உள்ள சத்துக்கள்
- ஆன்டிஆக்ஸிடன்ட்கள்
- இரும்பு சத்துக்கள்
- வைட்டமின் ஏ
- வைட்டமின் சி
- வைட்டமின் பி
- வைட்டமின் பி1
- வைட்டமின் பி6
- பொட்டாசியம்
- மெக்னீசியம்
- லைக்கோபீன்
- தாது உப்புக்கள்
- பைட்டோ நியூட்ரியன்
- சிட்ருலின் புரதச்சத்து
- பீட்டா கரோட்டின்
- லூடீன்


தர்பூசணி நன்மைகள்
- தர்பூசணியில் நீர் சத்துக்கள் அதிகம் இருப்பதால் உடலில் உள்ள சூட்டை தணிக்க வல்லது.
- அதிகமான உடல் எடை மற்றும் கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் இந்த தர்பூசணியை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கிறது மற்றும் கெட்ட கொழுப்புகளை வெளியேற்றுகிறது.
- தர்பூசணி இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது மற்றும் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
- BP உள்ளவர்கள் தாராளமாக இந்த தர்பூசணியை சாப்பிட்டு வரலாம் BP படிப்படியாக குறையும்.
- இரத்த நாளங்களில் உள்ள அழுக்குகளை நீக்கவும் இந்த தர்பூசணி உதவுகிறது.
- மற்ற பழக்களில் இல்லாத பைட்டோ நியூட்ரியன் சத்துக்கள் இந்த பழத்தில் இருப்பதினால் உடலின் ஆரோக்கியத்தை உயர்த்தி சுறுசுறுப்பாக உடலை வைக்கிறது.
- தர்பூசணியை கோடை காலத்தில் தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்குறது.
- சிட்ருலின் எனும் புரதச்சத்து இதில் இருப்பதால் இது உடலில் உள்ள இரத்த நாளங்களை விரிவடைய செய்கிறது இது இருதய கோளாறுகளையும் சரிசெய்கிறது.
- தர்பூசணியை ஆண்கள் தினமும் சாப்பிட்டு வந்தால் ஆண் உறுப்புகளில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது.
- தர்பூசணியில் லைக்கோபீன் எனும் புரத சத்துக்கள் இருப்பதால் எலும்புகளை வலுவடைய செய்து எலும்பு சம்பந்தமான நோய்களில் இருந்து விடுபடவும் தர்பூசணி நமக்கு உதவுகிறது.
- தர்பூசணியில் அதிக அளவு நீர் தான் இருக்கிறது கலோரியானது குறைவாக தான் இருக்கிறது எனவே இது எடையை குறைக்க உதவுகிறது.
- தர்பூசணி தலைமுடி மற்றும் சருமத்தை அழகாக்கும்.
- ஒருசிலருக்கு வைட்டமின் சி குறைபாட்டால் ஆஸ்துமா வருகிறது எனவே தர்பூசணியில் வைட்டமின் சி அதிக அளவில் இருப்பதால் இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா நோய் குணமாகும்.
- இந்த பழத்தில் நார்ச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் மலச்சிக்கலை போக்கும் வல்லமை கொண்டது.
- தர்பூசணி பாலியல் உணவை தூண்டும் வல்லமை கொண்டது.

தர்பூசணி தீமைகள்
- அதிக தர்பூசணியை சாப்பிடுவதால் வயிற்றில் அசாகரியம், வீக்கம், வாயு மற்றும் வயிற்றுப்போக்கு, செரிமான பிரச்சினையை ஏற்படுத்தலாம்.
- நீரிழிவு நோயாளியாக இருந்தால், அதிக தர்பூசணி சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கக்கூடும்.
- மது குடிக்கும் நபர்கள் அதிகமாக தர்பூசணியை எடுத்து வந்தால் கல்லீரல் வீக்கம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
- நீர் சத்துக்கள் அதிகம் உள்ளவர்கள் தர்பூசணியை அதிகம் எடுத்து வர கூடாது ஏனென்றால் இரத்தத்தின் அளவை அதிகரித்து கால்களில் வீக்கம் மற்றும் உடல் சோர்வு போன்ற நோய்கள் வரக்கூடும்.
- தர்சபூசணியில் அதிகப்படியான பொட்டாசியம் இருபதால் இது இதய ஒழுங்கற்ற துடிப்பு மற்றும் பல இதய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

தர்பூசணி விதை
தர்பூசணியை நாம் சாப்பிட்டு விட்டு தூர போடுகிறோம் இதில் உள்ள தோள்களும், விதைகளும் சிறந்த பலனை தருகிறது.
தர்பூசணி சாப்பிட்ட பின்னர் அதன் தோலை நம் முகத்தில் அல்லது கைகளில் தடவினால் அழுக்குகள் அகன்று தோலை மென்மையாக்கும்.
தர்பூசணி விதை பெண்களை விட ஆண்களுக்கு நிறைய பலனை தருகிறது.

தர்பூசணி விதையில் சிங்க் சத்துக்கள் அதிகம் உள்ளது. இது ஆண்களின் விந்தணுக்களை அதிகம் உருவாக்குகிறது.
தர்பூசணி விதைகளை காய வைத்து அதை வறுத்து சற்று தேன் கலந்து சாப்பிட்டால் ஆண்களுக்கு விந்தணுக்களை அதிகரிப்பதோடு பாலியல் சம்பந்தமான பிரச்சனைகளை இது சரிசெய்ய உதவுகிறது.
தர்பூசணி விதைகளில் இரும்பு சத்துக்கள் அதிகம் உள்ளதால் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அதிகரித்து இரத்தத்தை நன்கு சுத்தப்படுத்துகிறது.
Related Articles

செவ்வாழைப்பழம் பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி, பிட்டா கரோட்டின் போன்ற அத்தியாவசிய வைட்டமின்களை உள்ளடக்கியவை. வைட்டமின்களும் தாது உப்புக்களும் நிறைந்த பழம் இது. வாழைப்பழங்கள் சத்து நிறைந்தது. அதிலும் செவ்வாழை அதிக சத்து கொண்டது.Red banana benefits during pregnancy in tamil

பீட்ரூட் ஜூஸ் எடுத்துக்கொள்வதால், நம் உடலில் இருந்து நைட்ரிக் ஆக்சைடு, ரத்த நாளங்களை நன்கு விரிவடைய செய்து, தேவையான ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது. இதன் மூலம் ஆண்மையை அதிகரிக்கும் மிக சிறந்த ஜூஸாக உள்ளது. பீட்ரூட் ஜூஸைக் குடித்து வந்தால், கல்லீரலில் உள்ள பாதிக்கப்பட்ட செல்கள் புதுப்பிக்கப்படும்.

சப்போட்டாவானது மா, பலா மற்றும் வாழை போன்ற பழங்கள் வகையை சேர்ந்த ஒரு ருசியான கலோரிகள் நிறைந்த பழமாக இருக்கிறது. சப்போட்டா பழத்தில் பலதரப்பட்ட சத்துக்கள் நிறைந்துக் காணப்படுவதற்கு நன்றி கூறுவதோடு மட்டுமல்லாமல், நல்ல சுவை நிறைந்த பழமான இது பெருமளவிலான சுகாதார நன்மைகளை தரும் பழங்களில் ஒன்றாகும்.