Vishal: வெளிவராமல் இருக்கும் பல படங்களுக்கு `மதகஜராஜா' முன்மாதிரி!'' - நெகிழும் விஷால் | vishal about madhagajaraja success

Vishal: வெளிவராமல் இருக்கும் பல படங்களுக்கு `மதகஜராஜா’ முன்மாதிரி!” – நெகிழும் விஷால் | vishal about madhagajaraja success


அந்த அறிக்கையில், “2025ஆம் ஆண்டு பொங்கல் திருவிழா திருநாளில் “மதகஜராஜா” திரைப்படம் வெளிவந்து வெற்றிகரமாக இன்று 25வது நாள் மக்களால் கொண்டாடப்பட்டு மாபெரும் வெற்றி பெற்ற இந்த படத்திற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி கூறும் நேரம் இது. மதகஜராஜா திரைப்படம் பெரும் உழைப்பாலும் சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்டு கடந்த 2013ஆம் ஆண்டு இதே பொங்கல் திருநாளில் வெளிவர தயாராக இருந்த சூழ்நிலையில் தவிர்க்கமுடியாத சில காரணங்களாலும் பட நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து படக் குழுவினர்களுக்கு உண்மையான காரணங்கள் என்னவென்று தெரியாமலே அன்று படம் வெளிவர முடியாமல் போனது.

அதனை தொடந்து நானும், அன்பிற்கினிய சகோதரர் இயக்குநர் திரு.சுந்தர்.C அவர்களும் சோர்வடையாமல் ஒவ்வொரு வருடமும் வெளியிடுவதற்கான முயற்சிகள் எடுத்து வந்தோம். 12ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் மக்களிடம் பிரசித்தி பெறுவதை போன்று அதே எதிர்பார்ப்புடன் 12ஆண்டுகள் கடந்து வெளியான `மதகஜராஜா’ திரைப்படமும் மக்களின் பேராதரவு பெற்று பல கோடி வசூலையும் கடந்து மக்கள் குடும்பங்களுடன் திரையரங்குகளுக்கு வந்து கொண்டாடிய 2025 ஆண்டின் முதல் வெற்றி பெற்ற இப்படம், மாபெரும் வசூல் படைத்த திரைப்படமாக திரையுலகில் கால் பதித்தது.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *