அருண்குமார் இயக்கத்தில் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, பிருத்வி, சூரஜ் வெஞ்சாரமூடு, துஷாரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “வீர தீர சூரன் பாகம் -2′. பல்வேறு தடைகளுக்குப் பிறகு கடந்த வியாழக்கிழமை (மார்ச் 27) மாலை வெளியாகியிருந்தது இப்படம்.
ஊர்த் திருவிழாவின்போது சொந்த ஊர் ரௌடி கும்பல் மற்றும் போலீஸ் இடையே மாட்டிக் கொண்டு தன் குடும்பத்தை காப்பாற்றுவதற்காவும், தன்னைச் சுற்றி இருக்கும் பிரச்னைகளை முடிவுக்குக் கொண்டுவரவும் போராடும் விக்ரமின் ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான இது, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

படம் ரிலீஸாகும் சமயத்தில் சில சிக்கல்கள் இருந்ததால், ரிலீஸ் தாமதமாகி (மார்ச் 27) மாலை படம் திரைக்கு வந்தது. இதனால் படம் ரிலீஸ் ஆனதை தெரிவிக்கும் வகையிலும், ரசிகர்களின் கவனம் ஈர்ப்பதற்காகவும் விக்ரம் தமிழ்நாடெங்கும் பல ஊர்களின் தியேட்டருக்கு விசிட் அடித்து வருகிறார்.