`விஜய் ஆண்டனி 2.0′ கான்சர்ட் கடந்தாண்டு நடைபெற்றதை தொடர்ந்து `விஜய் ஆண்டனி 3.0′ கான்சர்ட் இன்று மீனம்பாக்கத்தில் நடைபெறவிருந்தது. ஆனால் சில சூழல்களால் அந்த கான்சர்ட் தற்போது தள்ளி வைக்கப்படுவதாக அறிவித்திருக்கிறார் விஜய் ஆண்டனி.
இதுகுறித்து பதிவிட்டிருக்கும் விஜய் ஆண்டனி, “ எதிர்பார்க்காத சில விஷயங்களாலும், அதிகாரிகளின் ஆலோசனையின்படி தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு இன்று நடைபெறவிருந்த `விஜய் ஆண்டனி 3.0′ கான்சர்ட் தள்ளி வைக்கப்படுகிறது. கடைசி நேர மாற்றத்திற்காகவும், இதனால் ஏற்படும் சிரமத்திற்கும் மன்னிப்பை கோருகிறேன். கான்சர்ட் நடைபெறவிருக்கும் புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.