Viduthalai 2: "மொத்தம் 8 மணி நேர படம்; ஓடிடி-க்கு வேற வெர்ஷன்" -'விடுதலை 2' குறித்து வெற்றி மாறன் | Director Vetrimaaran about viduthalai movie making and OTT version

Viduthalai 2: “மொத்தம் 8 மணி நேர படம்; ஓடிடி-க்கு வேற வெர்ஷன்” -‘விடுதலை 2’ குறித்து வெற்றி மாறன் | Director Vetrimaaran about viduthalai movie making and OTT version


படத்தின் பல வெர்ஷன்கள் குறித்துப் பேசிய வெற்றிமாறன், “படப்பிடிப்பில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு எடுத்துவிட்டோம். தியேட்டர் வெர்ஷன், திரைப்பட விழாக்களுக்குத் தனி வெர்ஷன் எனப் பல வெர்ஷன் பண்ணி வைச்சிருக்கோம். சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிட முதல் பாகம் 4 மணி நேரமும், இரண்டாம் பாகம் மூன்று மணி நேரமும் எனத் தனி வெர்ஷன் வைத்திருக்கிறோம். ஒட்டுமொத்தமாக 8 மணி நேர படம் இது. அதுனால நான்கு பாகம்கூட வைத்திருக்கலாம். வெளிநாட்டுக்கு அனுப்பிய வெர்ஷன் வேற, இங்குத் திரையிடுகிற வெர்ஷன் வேற. வெளிநாட்டுக்கு முன்பே அனுப்பிவிட்டோம். இங்க கடைசி வரைக்கும் எடிட் செய்து அனுப்பினேன். ஓடிடி-யில் கூடுதலாக சில காட்சிகள் சேர்க்கப்பட்டு வேறு ஒரு வெர்ஷன் வெளியிடப்படும்.” என்றார். 

vikatan%2F2024 12 21%2Fodb631i8%2FScreenshot 2024 12 21 at 7 15 11 PM Thedalweb Viduthalai 2: "மொத்தம் 8 மணி நேர படம்; ஓடிடி-க்கு வேற வெர்ஷன்" -'விடுதலை 2' குறித்து வெற்றி மாறன் | Director Vetrimaaran about viduthalai movie making and OTT versionவெற்றி மாறன்

வெற்றி மாறன்

மேலும், “முதல் பாகம் சூரியின் வழியே கதை விரிகிறது என்பதால், சூரி வாய்ஸ் ஓவர் கொடுத்தால் நல்ல இருக்கும் என்று செய்தோம். இரண்டாம் பாகம் வாத்தியாரின் கதை வழியே கதை விரிகிறது என்பதால் விஜய் சேதுபதி வாய்ஸ் ஓவர் கொடுத்தால் நல்லா இருக்கும் என்று நினைத்தோம். ஆனால், இந்தக் கதையைத் தொடங்கி வைத்தது குமரேசன் (சூரி) என்பதால் இரண்டாம் பாகத்திற்கும் சூரியை வைத்தே வாய்ஸ் ஓவர் கொடுத்தோம்” என்றார்.

இதற்கிடையில் பேசிய விஜய் சேதுபதி, “இந்தப் படத்தில் நிறைய அற்புதமான காட்சிகள் இருக்கின்றன. நீக்கப்பட்ட காட்சிகளை ப்ரோமோவாக வெளியிட்டால் நல்லா இருக்கும்.” என்றார். 



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *