விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் ஆகியோர் சினிமா விகடனுக்கு பேட்டி அளித்திருந்தனர். அதில் விஜய் சேதுபதி வெற்றிமாறன் குறித்து நெகிழ்ந்து பேசியிருக்கிறார். “படத்தில் முக்கியமான வேலை ஸ்டேஜிங். எப்படி ஒரு காட்சியை நிகழ்த்துறாங்க அப்டிங்குற ஒரு விஷயம் இருக்கிறது. அதை வெற்றிமாறன் சார் சிறப்பாகச் செய்வார். அவருடைய ஸ்டேஜிங்கை பார்க்குறதுக்கு ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கும்.
அவரும் சொல்லுவாரு ‘ஸ்டேஜிங்தான் ரொம்ப முக்கியம். அது சரியில்லனா படத்தில் இருந்து அந்தக் காட்சியே தூக்கிருவேன். அது எப்படிபட்ட காட்சியாக இருந்தாலும் சரி படத்தோட ஆன்மாவாக இருந்தாலும் சரி அதை நான் வைக்க மாட்டேன்’ என சொல்வாரு. எனக்கும், மஞ்சுவுக்கும் இந்த படத்துல ஒரு காட்சி இருக்கும். இரண்டு பேரும் உட்கார்ந்து பேசுற மாதிரியான காட்சி. அது அதை அவர் ஸ்டேஜ் பண்ண விதம் அவ்வளவு அழகாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.