Vidaamuyarchi: ``ட்ரெய்லரிலேயே `விடாமுயற்சி' கதை இருக்கு..!'' - ரெஜினா சொல்லும் சீக்ரெட் | actress regina cassandra about vidaamuyarchi

Vidaamuyarchi: “சில இயக்குநர்கள் என்னை ஏமாற்றிவிட்டார்கள்…” – நடிகை ரெஜினா கசாண்ட்ரா ஓபன் டாக்! | actress regina interview about vidamuyarchi


மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் அஜித் குமார், த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் விடாமுயற்சி. இவர்களுடன் ரெஜினா, அர்ஜுன், ஆரவ், நிகில் நாயர், தசரதி, கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில், அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இரண்டு வருடங்களுக்குப் பிறகு வெளியாகியிருக்கும் நடிகர் அஜித் படத்தை, அவரின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், தனியார் செய்தி நிறுவனத்துக்கு நடிகை ரெஜினா பேட்டியளித்திருந்தார். அப்போது, “பொதுவாக, பெரிய பட்ஜெட் படங்கள், ஸ்டார் படங்களில் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடங்கள் கொடுக்கப்படுவதில்லை. பல பெரிய படங்களில் பெண் கதாபாத்திரங்கள் மிக மோசமாக எழுதப்பட்ட விதத்தால் ஏமாற்றமடைந்தேன்.

ரெஜினா கசாண்ட்ரா

ரெஜினா கசாண்ட்ரா

விடாமுயர்ச்சியில் நடிகர் அஜித் குமார், இயக்குனர் மகிழ் திருமேனியுடன் பணிபுரிந்ததில் எனக்கு உத்வேகம் கிடைத்திருக்கிறது. இந்தக் கதாபாத்திரத்தை என்னைத் தவிர வேறு யாராலும் நடிக்க முடியாது என இயக்குநர் மகிழ் திருமேனி எனக்கு நம்பிக்கையாளித்தார். எனக்கு நியாயமாளிக்கும் ஒரு கதாபாத்திரத்தையே அவர் எழுதியிருப்பார் என நம்பினேன். ஒரு சிக்கலான கதாபாத்திரத்தை என்னால் நியாயப்படுத்த முடியும் என்று நம்பியதற்காக இயக்குநருக்கு நன்றி.

ஒரு படத்தின் பெண் கதாபாத்திரம் எப்படி எழுதப்பட்டிருக்கிறது என்பதை கவனித்தாலே, அந்தப் படத்தின் கதையையும், அதன் வலிமையையும் உணரலாம். அதனால்தான் நான் என் இயக்குநர்களை நம்புகிறேன். ஆனாலும் சில இயக்குநர்கள் என்னை ஏமாற்றிவிட்டார்கள். அதனால்தான் என்னிடம் சொல்லப்படும் ஒவ்வொரு கதையிலும், ஒரு தனித்துவத்தை உணர்ந்தால்தான் அதில் நடிக்கவே ஒப்புக்கொள்கிறேன்.” என்றார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *