மகிழ்திருமேனி இப்படத்தை இயக்கி இருக்கிறார். இந்தப் படத்தில் அஜித்துடன், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் விடாமுயற்சி படத்தைப் பார்க்க வந்த இயக்குநர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
தமிழக மக்கள் அனைவருக்கும் என் சார்பிலும் எனது குழுவின் சார்பிலும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். ரசிகர்களின் வரவேற்பு அற்புதமாக இருக்கிறது. அஜித் சார் டப்பிங்கின்போது படத்தைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தார்” என்றார். திரும்ப உங்களது காம்போவில் எப்போது படம் உருவாகும் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ” எங்களது காம்போவில் படம் உருவாவது குறித்து அஜித் சார் சொல்வார்” என்று கூறியிருக்கிறார்.