வீர தீர சூரன்
விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன் ஆகியோர் நடிப்பில் உருவாகி திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது `வீர தீர சூரன்”.
இயக்குநர் எஸ்.யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.
ஜி.வி இசையில் படத்தின் பல காட்சிகளும் தியேட்டர் மெட்டிரியலாக அமைந்திருந்தன.
மதுர வீரன் தானே
அப்படி அந்த இசையைத் தொடர்ந்து வரும் ஸ்டண்ட் காட்சிகள் அனைத்தையும் மக்கள் திரையரங்குகளில் கொண்டாடினார்கள்.
இதையெல்லாம் தாண்டி வித்யாசாகர் இசையில் உருவான தூள் திரைப்படத்தின் `மதுர வீரன் தானே’ பாடலை க்ளைமேக்ஸில் இணைத்திருந்தது பார்வையாளர்களுக்கு கூஸ்பம்ஸ் டிரீட்டாக அமைந்தது.