Veera Dheera Sooran: ``ஆங்கில தரத்தில் ஒரு... நாம பேச கூடாது, நம்ம படம்தான் பேசணும்" - எஸ்.ஜே.சூர்யா

Veera Dheera Sooran: “ஆங்கில தரத்தில் ஒரு… நாம பேச கூடாது, நம்ம படம்தான் பேசணும்" – எஸ்.ஜே.சூர்யா


சித்தா பட புகழ் இயக்குநர் எஸ்.யு. அருண்குமார், சீயான் விக்ரம் காம்போவில் உருவாகியிருக்கும் `வீர தீர சூரன் – பாகம் 2′ திரைப்படம் மார்ச் 27-ம் தேதி வெளியாகவிருக்கிறது. இப்படத்தில், எஸ்.ஜே. சூர்யா, மலையாள நடிகர் சுராஜ், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் இப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.

வீர தீர சூரன் இசைவெளியீட்டு விழா
வீர தீர சூரன் இசைவெளியீட்டு விழா

இந்த நிலையில், வீர தீர சூரன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், அருண்குமார், விக்ரம், எஸ்.ஜே. சூர்யா, துஷாரா விஜயன், ஜி.வி. பிரகாஷ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய எஸ்.ஜே. சூர்யா, “இந்த படம் அருமையான படம். ஒரு வித்தியாசமான கன்சப்ட்டை மையப்படுத்தியது. இந்த படம் முழுக்க முழுக்க அருண்குமாரோட ஜோன்ல இருக்கிற படம். அவர் மிகப்பெரிய மார்ட்டின் ஸ்கார்சிசி ரசிகர். ஆங்கில தரத்தில் தமிழ் மண்ணில் எடுக்கப்பட்ட ஒரு தமிழ் படம். இந்த படத்துல நடிச்சதை ரொம்பவே என்ஜாய் பண்ணினேன்.

வீர தீர சூரன் இசைவெளியீட்டு விழா - எஸ்.ஜே.சூர்யா
வீர தீர சூரன் இசைவெளியீட்டு விழா – எஸ்.ஜே.சூர்யா

அருண்குமார் என்னுடைய தன்மையை முழுமையாக மாற்றிவிட்டாரு. நான் எப்போதும் நடிக்கிற மாதிரி இந்தப் படத்தோட ஒரு காட்சியில நடிச்சேன். எல்லோரும் கைத்தட்டினாங்க. இயக்கநரும் பாராட்டுவார்னு நெனச்சேன். ஆனால், அவர் நீங்க நடிச்சது நல்லா இருந்தது. அதையே கொஞ்சம் வேற மாதிரி பண்ணலாம்னு சொன்னாரு. அந்தக் காட்சியில நீங்க வேற ஒரு எஸ்.ஜே. சூர்யாவை பார்ப்பீங்க. நான் எப்போதும் என்னை இயக்குநர்கள்கிட்ட ஒப்படைச்சிடுவேன். அப்படிதான் இந்த பயணம் குணச்சித்திர நடிகராகவும், வில்லனாகவும் போயிட்டு இருக்கு.

இயக்குநர் அருண்குமார்
இயக்குநர் அருண்குமார்

தரமான சம்பவம்

ஒன்னு கதையின் நாயகன் அல்லது எதிர்நாயகன். ஆனால், நாயகன். அது இருக்கணும். இந்த படம் ஒரு தரமான சம்பவம். நம்ம பேசக்கூடாது. படம்தான் பேசணும். இயக்குநர் வசந்த் சார் என்னை பழைய படங்கள் பார்த்துட்டு வரச் சொல்லுவாரு. அப்படி படங்கள் பார்த்து எனக்கு சாவித்ரி அம்மா ரொம்ப பிடிக்கும். அவங்கள மாதிரி துஷாரா விஜயனும் பெரிய இடத்துக்கு வரணும். அவங்க இயக்குநரின் நடிகைனு சொல்லலாம். அருண்குமார் இயக்குநர் மட்டுமல்ல, நல்ல மனிதர். அவர் ஒரு நேர்மையான இயக்குனர்” என்று கூறினார்.

வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

WhatsApp Image 2025 03 15 at 11.11.30 Thedalweb Veera Dheera Sooran: ``ஆங்கில தரத்தில் ஒரு... நாம பேச கூடாது, நம்ம படம்தான் பேசணும்" - எஸ்.ஜே.சூர்யா

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *