கல்யாண வீட்டு வத்த குழம்பு செய்வது எப்படி? | Vatha Kulambu in Tamil

கல்யாண வீட்டு வத்த குழம்பு  | Vatha Kulambu in Tamil

நமது உணவு முறைகளில் பாரம்பரியமாக இருந்து வருவது குழம்பு. ஒரு சிலர்க்கு சைவ உணவில் செய்யப்படும் குழம்பு பிடிக்கும், ஒரு சிலருக்கு அசைவத்தில் செய்யும் குழம்பு பிடிக்கும். ஆனால் எல்லோருக்கும் பிடித்த குழம்பு என்றால் அது வத்தக்குழம்பு தான், அதிலும் விஷேச நாட்களில் செய்யப்படும் வத்தக்குழம்பு சுவையில் அல்டிமேட்டாக இருக்கும். 

கல்யாண வீட்டு வத்த குழம்பு செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

தனியா (மல்லி) – 2 கைப்பிடி அளவு

சிவப்பு மிளகாய் – 6

வெந்தயம் – 1 டேபிள் ஸ்பூன்

சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்

மிளகு – 1 டேபிள் ஸ்பூன்

துவரம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்

பெருங்காயம் – 1 சிட்டிகை

கல்யாண வீட்டு வத்த குழம்பு செய்வது எப்படி?

கல்யாண வீட்டு வத்த குழம்பு செய்முறை:

வத்த குழம்பு செய்வது எப்படி: கடாயில் மல்லி 2 கைப்பிடி அளவு, சிவப்பு மிளகாய் 6, மிளகு 2 டேபிள் ஸ்பூன், வெந்தயம் 1 டேபிள் ஸ்பூன், சீரகம் 1 டேபிள் ஸ்பூன், துவரம் பருப்பு 2 டேபிள் ஸ்பூன், பெருங்காயம் 1 சிட்டிகை சேர்த்து வறுத்து கொள்ளவும் (எண்ணெயில்லாமல் வறுக்கவும்).

வறுத்த பின்பு இதனை மிக்சியில் போட்டு நன்றாக பவுடர் போல அரைத்து கொள்ளவும்.

தாளிப்பதற்கு:

கடுகு – 1 டேபிள் ஸ்பூன்

வெந்தயம் – 1 டேபிள் ஸ்பூன்

சிவப்பு மிளகாய் – 5

கருவேப்பிலை – 1 கொத்து

குழம்பு செய்வதற்கு தேவையான பொருட்கள்:

புளி – தேவையான அளவு

மஞ்சள் தூள் – அரை டேபிள் ஸ்பூன்

மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன்

வத்தல் – தேவையான அளவு (சுண்டைக்காய் வத்தல், கத்தரிக்காய் வத்தல்)

பூண்டு – 1 கையளவு (உரித்தது)

வெங்காயம் – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

கருவேப்பிலை – 1 கொத்து

செய்முறை:

Step: 1

ஒரு கடாயில் ஒன்றரை குழி கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடாக்கவும். எண்ணெய் சூடான பிறகு கடுகு 1 டேபிள் ஸ்பூன், சிவப்பு மிளகாய் 2, வெந்தயம் 1 டேபிள் ஸ்பூன், கருவேப்பிலை 1 கொத்து, வத்தல் தேவையான அளவு சேர்த்து வதக்கவும்.

Step: 2

வத்தல் நன்றாக கருத்து வரும் வரை வதக்கவும். பின் அதில் வெங்காயம் சிறிதளவு, பூண்டு 1 கையளவு (தோல் நீக்கியது) சேர்த்து வதக்கவும். வெங்காயம், பூண்டு பொன்னிறமான பிறகு புளிக்கரைசலை தேவையான அளவு ஊற்றவும்.

Step: 3

Vatha Kulambu Recipe in Tamil: பின் அதில் மஞ்சள் தூள் 1 டேபிள் ஸ்பூன், மிளகாய் தூள் 2 டேபிள் ஸ்பூன், உப்பு தேவையான அளவு சேர்த்து மிக்ஸ் செய்து, 1 கொதி வரும் வரை வேக வைக்கவும்.

Step: 4

வத்த குழம்பு செய்வது எப்படி: கொதித்த பிறகு அரைத்து வைத்திருக்கும் பொடியை 4 டேபிள் ஸ்பூன் சேர்க்கவும். பின் அதில் 1 சிட்டிகை பெருங்காய தூள், நல்லெண்ணெய் 1 டேபிள் ஸ்பூன் சேர்க்கவும்.

இப்பொழுது அடுப்பை அணைத்து விடலாம். சூடான சுவையான, அருமையான வத்தல் குழம்பு தயார்.

அஜினோமோட்டோ
அஜினோமோட்டோ எப்படி ஒரு உணவின் சுவையை கூட்டுகிறது?

உடலுக்கு தீங்கு விளைவிப்பதாக ஏன் கூறப்படுகிறது?

அஜினோமோட்டோ என்னும் ஒரு சுவை கூட்டும் உப்பு… அதை சர்க்கரை என்றும் சொல்லலாம்…!

பொதுவாக எல்லா சீன வகை உணவுகளில், சுவை கூட்ட சேர்க்கப்படும் இந்த அஜினோமோட்டோ பற்றி, நாம் என்ன அறிந்து வைத்திருக்கிறோம் என்றால்…அது லைட்டா தூவி விட்டால், டேஸ்ட் இல்லாத உணவு கூட ருசிக்கும். ஆனால் அதிகமாக யூஸ் பண்ணினால் முடி கொட்டும் அவ்வளவு தான் என்று…ஆனால் உண்மையில் இதன் வரலாற்றை அறிந்தால்?அஜினமோட்டோ என்பது நாம் நினைப்பது போல, அது ஒரு கடல் உப்பின் பெயரல்ல…

அது ஒரு கம்பெனியின் பெயர் , ஜப்பானில் 1917 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் பெயரே அதன் பொருளுக்கும் ஒட்டிக்கொண்டது..

உண்மையில் இந்த உப்பின் பெயர் Monosodium glutamate ( MSG ) என்பதாகும்,இதனை மருத்துவ உலகில் slow killer என்கிறார்கள்..

\

சுவை மிகுந்த பாதாம் அல்வா செய்வது எப்படி….?
சுவை மிகுந்த பாதாம் அல்வா செய்வது எப்படி….?

செய்முறை: முதலில் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது நெய் ஊற்றி வாணலியில் பரப்பிக் கொள்ள வேண்டும். பின்னர் அதே வாணலியில் 1/4 கப் தண்ணீர் ஊற்றி, நன்கு கொதிக்க விட்டு, பின் அதில் சர்க்கரை சேர்த்து கரைய விட வேண்டும்.

பிறகு அதில் பாதாம் பேஸ்ட் சேர்த்து, பால் மற்றும் குங்குமப்பூ சேர்த்து அடுப்பில் வைத்து, மிதமான தீயில் தொடர்ந்து கிளறி விட வேண்டும். 

அப்படி கிளறி விடும் போது, கலவையானது சற்று கெட்டியாக ஆரம்பிக்கும் போது, அதில் பாதி நெய் சேர்த்து 10 நிமிடம் குறைவான தீயில் வைத்து தொடர்ந்து கிளறி விடும் போது, நெய்யை அல்வா முற்றிலும் உறிஞ்சிவிடும்.

ஆந்திரா ஸ்டைல் மட்டன் குழம்பு
ஆந்திரா ஸ்டைல் மட்டன் குழம்பு

ஆந்திரா உணவுகள் அனைத்தும் நல்ல காரமாகவும், சுவையுடனும் இருக்கும். அதிலும் அசைவ உணவுகள் என்றால் சொல்லவே வேண்டாம். அவ்வளவு அருமையாகவும், காரமாகவும் இருக்கும். இப்போது பக்ரீத் ஸ்பெஷலாக நாம் பார்க்கப் போவது ஆந்திரா ஸ்டைல் மட்டன் குழம்பு தான்.

இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஆந்திரா மட்டன் குழம்பு செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். சரி, இப்போது அதன் செய்முறையைப் பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

முதலில் மட்டனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் மட்டனைப் போட்டு, 2 கப் தண்ணீர், உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 6 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரை திறந்து, அதில் உள்ள நீரை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ளவும்.