இத்திரைப்படத்திற்காக சூர்யா இரண்டு காளைகளை தனது வீட்டில் வாங்கி வளர்த்து வருகிறாராம். அதுமட்டுமல்ல, இப்படத்திற்கான சில அனிமட்ரானிக்ஸ் வேலைகளும் நடந்து வருவதாக தகவல்கள் முன்பு வெளியாகின. மாட்டுப்பொங்கலான இன்று சூர்யா, வெற்றிமாறன் உடனான ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார் தாணு.
இந்தப் பதிவில் அவர், “அகிலம் ஆராதிக்க `வாடிவாசல்’ திறக்கிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. `விடுதலை’ திரைப்படத்தின் இரண்டு பாகங்களின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரிக்கும் படத்தை இயக்குகிறார் வெற்றி மாறன். இந்தப் படத்தில் தனுஷ் கதாநாயனாக நடிக்கவிருப்பதாகவும் சமீபத்தில் அறிவிப்பு வெளியாகியிருந்தது.