இந்த நிகழ்வில் பேசிய நடிகை த்ரிஷா, ” நான் இதுக்கு முன்னாடி நிறைய படங்கள் வெளியீட்டின் போது உங்கள எல்லாம் சந்திச்சுருக்கேன். ஆனால் இப்போ எனக்கு ரொம்ப ஸ்பெஷல், ஏன்னா முதல் முறை மலையாளப் படத்திற்காக சந்திக்கிறேன். என்னோட கரியர்ல எனக்கு எப்பவுமே மலையாள சினிமா மீது பெரிய மரியாதை இருக்கு. அவங்க படம் எல்லாம் ரொம்ப வித்தியாசமா, புத்திசாலித்தனமா இருக்கும். ஒரு வருஷத்துக்கு ஒரு மலையாளப் படமாவது நடிக்கணும்னு இருந்தேன். சரியான நேரத்துல இயக்குநர் அகிலை சந்திச்சேன். அவர் கதை சொன்ன விதம் ரொம்பவே அருமையா இருந்துச்சு. டொவினோ பத்தி கேக்கவே வேணாம் அவர் தான் “லக்கி ஸ்டார் ஆஃப் கேரளா (LUCKY STAR OF KERALA)’. வினையும் நானும் `என்றென்றும் புன்னகை’ படத்துல இருந்தே நண்பர்கள்.
அந்தப் படம் லவ், ஃபிரெண்ட்ஸ் என அது ஒரு டிராக், இது அதுல இருந்து அப்படியே வித்தியாசமான டிராக். எப்பவும் படம் எடுக்கும் போது அந்த இடம் ஜாலியா இருந்தாலே அது நல்லா இருக்கும். பாதிக் களம் ஜெயிச்ச மாதிரி தான் என நான் எப்பவும் சொல்லுவேன். அப்படி தான் இந்தப் படமும் ஷூட்டிங்கில் இருந்தே நல்ல ஜாலியாதான் இருந்துச்சு .