Tourist Family: ``இந்தப் படத்தால் இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை கிடைக்கணும்'' - சசிகுமார் ஓபன் டாக்

Tourist Family: “இந்தப் படத்தால் இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை கிடைக்கணும்” – சசிகுமார் ஓபன் டாக்


அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “டூரிஸ்ட் ஃபேமிலி’ (Tourist Family). குடும்பத் தலைவனாக சசிகுமார் நடிக்க, சிம்ரன், ‘ஆவேசம்’ படத்தில் நடித்த மிதுன் ஜெய் சங்கர் மற்றும் யோகி பாபு, கமலேஷ், எம். எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். மே 1-ம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியைச் சமாளிக்க முடியாமல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையின் வல்வெட்டித்துறையிலிருந்து சென்னையில் குடியேறுகிறது ஈழத் தமிழர்கள் குடும்பம். அந்த ஏரியாவே விரும்பும் ஓர் குடும்பமாக எப்படி மாறுகிறோம் என்பதுதான் கதை. ஈழத் தமிழர்கள் என்றால் அவர்கள் பட்ட கஷ்டத்தையும் வலியையும் பற்றித்தான் பேசுவார்கள். அவர்களின் கஷ்டத்தை எவ்வளவு தூரம் சந்தோஷமாக மாற்றிக்கொண்டு வாழ்கிறார்கள் என்பதைப் பற்றியாதாக இக்கதைக்களம் அமைந்திருக்கிறது.

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில்...

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில்…

இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் பேசியிருக்கும் நடிகர் சசிகுமார், “இந்தக் கதையை எந்தவித மாற்றமும் செய்யாமல் அப்படியே எடுத்திருக்கிறோம். அந்த அளவிற்கு கதை சிறப்பாக, கச்சிதமாக எழுதப்பட்டிருந்தது. கதையை கேட்டு சிம்ரன் மேடம் உடனே ஓகே சொன்னார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *