கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியின் “தக் லைஃப்’ ரிலீஸ் வருகிற ஜூன் 5ம் தேதி என அறிவிக்கப்பட்டிருப்பதால் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
‘நாயகன்’ படத்திற்குப் பின் 36 ஆண்டுகளுக்குப் பிறகு, கமல், மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால், ‘தக் லைஃப்’ எதிர்பார்ப்பிற்குள்ளான படமாக மாறியிருக்கிறது.

இந்நிலையில் படத்தின் முதல் பாடல் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில், நிகழ்ச்சித் தொகுப்பாளர் த்ரிஷாவிடம் திருமணம் குறித்து என்ன நினைக்கிறீர்கள் எனக் கேள்வி கேட்டார்.
அதற்குப் பதிலளித்த நடிகை த்ரிஷா, “எனக்குத் திருமணத்தில் நம்பிக்கை இல்லை. அது நடந்தாலும் பரவாயில்லை, நடக்காவிட்டாலும் பரவாயில்லை” என்றார்.