ராய்கட் மலைகள், அரசர் கால சுரங்கப்பாதை எனப் பார்த்திடாத பல விஷயங்களையும் தனது கேமரா மூலம் அழகாகப் பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுகேஷ் விஸ்வநாத். இவரின் ஒளிப்பதிவுக்கு கலை இயக்குநரின் செம்மையான வேலைகளும் தீனிபோடுகிறது. புதையலைத் தேடிச் செல்லும் வேளையில் ரிப்பீட் அடிக்கும் காட்சிகளைக் கத்தரித்து தனது `கட்’களால் படத்தொகுப்பாளர் இன்னும் அழகாகக் கோத்திருக்கலாம். புதையலைத் தேடும் சமயத்திலும், எதிரணி பார்வையிலிருந்து தப்பிச் செல்லும் காட்சியிலும் களத்திற்கேற்ப த்ரில் உணர்வைக்கூட்டுகிறது ட்ராய் – அரிஃப் கூட்டணியின் பின்னணி இசை.
வரலாற்றை மிகத் தீவிரமாக ஆராய்ந்து திகட்டதால் வகையில் திரைக்கதையாக கோர்த்து த்ரில் கொடுக்கிறார் திரைக்கதையாசிரியர் துஷார் அஜ்கோவன்கர். ஒரு வரலாற்று கதையை செம்மையான ரகத்தில் தெளிவாக சொல்லியதற்காக இவருக்கு பாராட்டுகளைக் கொடுக்கலாம். த்ரில் அனுபவத்தைக் கூட்டுவதற்காக கதை சொல்லும் பார்மெட்டில் மெனகெட்டிருக்கிறார்கள்.
![The Secret of Shiledars Review](https://media.vikatan.com/vikatan%2F2025-02-07%2Futlzaaf5%2FVS_YouTube_HotstarSpecialsTheSecretOfTheShiledarsOfficialTrailerRajeevKhandelwalSaiTamhankar_0_46_.jpg?q=75&auto=format%2Ccompress)
ஆனால், அதில் ஒளிந்திருக்கும் எளிதில் யூகிக்கும்படியான திருப்பங்கள் போன்ற விஷயங்களால் சில எபிசோடுகளுக்கு மேல் டல் அடிக்கிறது. துப்புகளை வைத்து புதையலைக் கண்டுபிடிக்கும் காட்சிகளை சுவரஸ்யமாகவும் புதுமையாகவும் கொடுக்கவேண்டும் எனத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால் முடிவில் அது கார்டூன் கேம் டெம்ப்ளேட்டில் எஞ்சி நிற்கிறது. ஒவ்வொரு எபிசோடின் இறுதியிலும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் லெவலிலான காட்சிகள் இல்லாததும், தலைதூக்கும் லாஜிக் மீறல்களும் இந்த சீரிஸின் அடுத்த சில மைனஸ்கள்.