கிஷன் தாஸ், ஸ்மிருதி வெங்கட், ராஜ் அய்யப்பா ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம்தான் `தருணம்’. பொங்கல் ரிலீஸாக நேற்றைய தினம் வெளியான இத்திரைப்படத்தின் திரையிடல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்திருக்கிறது. படத்தை மறுவெளியீடு செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார் இப்படத்தின் இயக்குநர் அரவிந்த் ஸ்ரீனிவாசன்.
இது குறித்து பதிவிட்டிருக்கும் இயக்குநர் அரவிந்த் ஸ்ரீனிவாசன், “சான்றிதழ் வேலைகளில் தாமதமானதால் இத்திரைப்படம் குறுகிய திரைகளிலேயே வெளியானது. உங்களின் நேர்மறையான கருத்துகளுக்கு நன்றி. பெரிய வடிவில் `தருணம்’ திரைப்படம் கூடிய விரைவில் மறுவெளியீடு செய்யப்படும். புதிய ரிலீஸ் தேதியை அறிவிக்கிறோம்.” எனப் பதிவிட்டிருக்கிறார்.