Thandel : ``ரெண்டும் கெட்டானாக இருந்திடக் கூடாது'' - நாக சைதன்யா பட விழாவில் வெங்கட் பிரபு

Thandel : “ரெண்டும் கெட்டானாக இருந்திடக் கூடாது'' – நாக சைதன்யா பட விழாவில் வெங்கட் பிரபு


நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் உருவாகியிருக்கிற `தண்டேல்’ திரைப்படம் பிப்ரவரி 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு காதல் திரைப்படமாக இப்படத்தை எடுத்து முடித்திருக்கிறார் இயக்குநர் சந்து மொன்டேட்டி. இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. கார்த்திக் சுப்புராஜ், வெங்கட் பிரபு, நடிகர் கார்த்தி என தமிழ் பிரபலங்கள் பலரும் சிறப்பு விருந்தினராக இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.

இயக்குநர் கார்த்தி சுப்புராஜ் பேசுகையில், “ நடிகர் கருணாகரன் `ரெட்ரோ’ திரைப்படத்துல நடிச்சிட்டு இருக்கும்போது இந்த `தண்டேல்’ படத்தைப் பற்றி சொல்லிட்டு இருப்பாரு. அப்போதுல இருந்து இந்த ப்ராஜெக்ட் மேல ஒரு எக்சைட்மென்ட் எனக்கு இருந்தது. படத்துல நாக சைதன்யா சார், சாய் பல்லவி மேடம் மாதிரியான அற்புதமான நடிகர்கள் இருக்காங்க. சாய் பல்லவி மேடம் `அமரன்’ படத்துல ரொம்ப நல்லா நடிச்சிருந்தாங்க. இயக்குநர் சந்து மொன்டேட்டியோட முந்தைய படங்களெல்லாம் எனக்குப் பிடிக்கும். நடிகர் கருணாகரன் காமெடியை தாண்டி எந்தவிதமான கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்கேற்ப பொருந்திடுவாரு. அவருக்கு இந்தப் படம் தெலுங்குல ஒரு பிரேக் கொடுக்கும்.” எனப் பேசி முடித்துக் கொண்டார்.

et00384012 gnfrrvyzam landscape Thedalweb Thandel : ``ரெண்டும் கெட்டானாக இருந்திடக் கூடாது'' - நாக சைதன்யா பட விழாவில் வெங்கட் பிரபு
Thandel Poster

இந்த நிகழ்வில் பேசிய வெங்கட் பிரபு, “ நாக சைதன்யாகூட `கஸ்டடி’ திரைப்படத்தை இயக்கினேன். ரெண்டு வருஷம் கழிச்சு அவரை இப்போதான் பார்க்கிறேன். அவர் கதைகளை தேர்வு செய்யும் விதம் ரொம்பவே பயங்கரமாக இருக்கும். சொல்லப்போனால், அவருக்கு கதை சொல்லி சமாதானப்படுத்துறதே கஷ்டம்.

இந்தப் படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டதுனு நடிகர் கருணா சொன்னாரு. டிரைலர் பார்க்கும்போதே படத்திற்காக எவ்வளவு கஷ்டப்பட்டிருக்காங்கனு தெரியுது. நான் சாய் பல்லவி மேடமுக்கு மிகப்பெரிய ரசிகன். பல டைரக்டர்ஸும் சாய் பல்லவி மேடமோட ரசிகர்கள்னுதான் நினைக்கிறேன். அந்தளவுக்கு நல்லா நடிக்கிறாங்க. இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத்தை எனக்கு ரொம்ப நாட்களாக தெரியும். நாங்களெல்லாம் ஒரே கேங். சுயாதீன பாடல்கள் இப்போதான் பிரபலமாக இருக்கு. ஆனால்,90-களிலேயே தேவி ஶ்ரீ பிரசாத், எஸ்.பி.பி. சரண் எல்லாரும் சேர்ந்து பாடல்கள் பண்ணியிருக்காங்க. (சிரித்துக் கொண்டே…) அப்போதும் என்னை பாட சேர்த்துக்க மாட்டாங்க. இப்போ தேவி ஶ்ரீ பிரசாத் உலகம் முழுவதும் கலக்கிட்டு இருக்காரு. திரும்ப நானும் நாக சைதன்யாவும் சேர்ந்து ஒழுங்கான தெலுங்கு படம் பண்ணனும்னு ஆசை. அந்த ரெண்டும் கெட்டானாக போயிடக் கூடாது.” என்றார்.

Gijc6wdXQAIA9dC Thedalweb Thandel : ``ரெண்டும் கெட்டானாக இருந்திடக் கூடாது'' - நாக சைதன்யா பட விழாவில் வெங்கட் பிரபு
Karthik Subbaraj

இந்த நிகழ்வில் பேசிய சாய் பல்லவி, “நிஜமான சம்பவத்தைத்தான் அழகான காதல் கதையாக மாற்றி திரைப்படமாக எடுத்திருக்காங்க. இந்தப் படத்தோட பயணம் எனக்கு என்றும் நினைவில் இருக்கக்கூடிய பயணம்.” என்றார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *