Thalavettiyaan Paalayam: 'காமெடி !காமெடி! காமெடி!' - மெகா ஹிட் இந்தி வெப் சீரிஸின் தமிழ் ரீமேக் ! | thalaivettiyaan paalayam webseries releasing tomorrow on amazon prime

Thalavettiyaan Paalayam: ‘காமெடி !காமெடி! காமெடி!’ – மெகா ஹிட் இந்தி வெப் சீரிஸின் தமிழ் ரீமேக் ! | thalaivettiyaan paalayam webseries releasing tomorrow on amazon prime


‘மர்மதேசம்’ தொலைக்காட்சித் தொடர் 90ஸ் கிட்ஸுக்கு அவ்வளவு ஃபேவரைட். இந்த திகில் தொலைக்காட்சித் தொடரை இயக்கியது இயக்குநர் நாகாதான். இதுமட்டுமல்ல, 2010-ல் வெளியான ‘ஆனந்தபுரத்து வீடு’ படத்தின் இயக்குநரும் இவர்தான். இவர் ஒரு ஒளிப்பதிவாளரும்கூட. ஆம்… குறிப்பாக இந்த பாலிவுட் களம் இவருக்கு புதிதல்ல. Gawaahi படத்திற்கும், சல்மான் கான் நடித்த ‘Patthar Ke Phool‘ படத்திற்கு ஒளிப்பதிவாளர் இவர்தான். ஒரு இடைவெளிக்குப் பிறகு டைரக்‌ஷனில் களமிறங்கி ‘பஞ்சாயத்’ வெப் சீரிஸை தமிழில் ரீமேக் செய்திருக்கிறார்.

Thalaivettiyaan Paalayam StillThalaivettiyaan Paalayam Still

Thalaivettiyaan Paalayam Still

‘ஸ்டாண்ட் அப்’ காமெடியனாக நமக்கு பரிச்சயமான அபிஷேக் குமார்தான் இந்த தமிழ் ரீமேக்கில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அதாவது பஞ்சாயத் சீரிஸில் வரும் ஜித்தேந்திர குமார் கதாபாத்திரத்தில்தான் இவர் நடித்திருக்கிறார். இதன் பிறகு சின்னத்திரை எவர் க்ரீன் ஜோடியான சேத்தன், தேவதர்ஷினி ஆகியோரும் இந்த சீரிஸின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். நடிகர் சேத்தன் ‘விடுதலை’ , ‘ஜமா’ ஆகிய திரைப்படங்களில் தன் நடிப்பின் மூலம் வேறு ஒரு பரிமாணத்தை எட்டியிருக்கிறார். அதே போல இவரின் மனைவி தேவதர்ஷினியும் இதில் நடித்திருக்கிறார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *