விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்- இனிப்பு ரவா கொழுக்கட்டை | Sweet semolina dumplings recipe

Sweet semolina dumplings recipe

Sweet semolina dumplings recipe
Sweet semolina dumplings recipe

இந்த விழாவின் நாயகனான (Sweet semolina dumplings recipe)விநாயகருக்கு கொழுக்கட்டை என்றால் பிடிக்கும். எனவே இந்நாளில் விநாயகருக்கு படைக்க பலவிதமான கொழுக்கட்டைகளை செய்வோம். இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி அன்று நீங்கள் அட்டகாசமான சுவையைக் கொண்ட கொழுக்கட்டை செய்ய நினைத்தால், இனிப்பு ரவா கொழுக்கட்டை செய்யுங்கள். இந்த கொழுக்கட்டை செய்வது மிகவும் சுலபம். அதோடு இது குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.

உங்களுக்கு (Sweet semolina dumplings recipe)இனிப்பு ரவா கொழுக்கட்டை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே இனிப்பு ரவா கொழுக்கட்டையின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* ரவை – 1 கப்

* வெல்லம் – 3/4 கப்

* தண்ணீர் – 2 கப்

* துருவிய தேங்காய் – 1/2 கப்

* ஏலக்காய் பொடி – 1 டீஸ்பூன்

* நெய் – 1 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் வெல்லத்தை நீரில் போட்டு அடுப்பில் வைத்து கரைத்து இறக்கி வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், ரவையைப் போட்டு வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு வெல்ல நீரை ஒரு அகலமான பாத்திரத்தில் எடுத்து, அதில் துருவிய தேங்காயைப் போட்டு, 2 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.

* பிறகு அதில் வறுத்த ரவையை சேர்த்து கிளறி, அத்துடன் ஏலக்காய் பொடி சேர்த்து கெட்டியாகும் வரை கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

* பின்னர் அந்த கலவையை சிறு உருண்டைகளாக உருட்டி இட்லி தட்டில் வைத்து, 5-8 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான இனிப்பு ரவா கொழுக்கட்டை தயார்.