Omicron
Table of Contents
உங்கள் சமையலறையில்( Omicron) இருக்கும், நீங்கள் தினமும் பயன்படுத்தும் சில பொருட்கள் உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உங்களை ஓமிக்ரானில் இருந்து பாதுகாக்கும் கவசமாக இருக்கும்.
இத்தகைய சூழ்நிலையில், மக்கள் தங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சந்தையில் கிடைக்கும் பல்வேறு பொருட்களை வாங்க அதிக பணம் செலவிடுகிறார்கள்.
அதெல்லாம் தேவையில்லை. உங்கள் சமையலறையில் இருக்கும், நீங்கள் தினமும் பயன்படுத்தும் சில பொருட்கள் உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உங்களை ஓமிக்ரானில் இருந்து பாதுகாக்கும் கவசமாக இருக்கும்.
நாம் தினமும் பயன்படுத்தும் இந்த 5 பொருட்கள் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், முக்கியமாக ஒமிக்ரான வகை கொரோனா தொற்றையும் தடுக்கும்.
இலவங்கப்பட்டை
இலவங்கப்பட்டை மருத்துவ குணம் கொண்டதாகவும் கருதப்படுகிறது. பெரும்பாலும் மக்கள் இதை உணவு, தேநீர் அல்லது இனிப்புகள் போன்றவற்றில் கலந்து பயன்படுத்துகிறார்கள். இலங்கபட்டையை கொதிக்கும் நீரில் போட்டு வடிகட்டி அருந்துலாம். உணவில் அல்லது டீயில் சேர்க்கலாம். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். கொரோனா போன்ற தொற்று நோய்களைத் தவிர்க்க இது பயனுள்ளதாக இருக்கும்.
நெல்லிக்காய்
நெல்லிக்காயில், வைட்டமின் சி உள்ளது. வைட்டமின் சி உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுகக்களை வெளியேற்ற எதிர்த்துப் போராட உதவுகிறது.
மஞ்சள்
மஞ்சள் ஒரு நுண்ணுயிர் எதிர்ப்பியாகப் பார்க்கப்படுகிறது. தினமும் இதைப் பயன்படுத்தினால், அது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், நீங்கள் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஆபத்தான பிற நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறது. இவற்றில் புற்றுநோய் மற்றும் கட்டிகளும் அடங்கும். நீரிழிவு நோயாளிகளுக்கும் மஞ்சள் மிகவும் ஆரோக்கியமானது. மஞ்சள் நம் உடலுக்கு தொற்று நோய்களைத் தவிர்க்கும் வலிமையைத் தருகிறது.
இஞ்சி
உங்களுக்கு சாதாரண இருமல் இருந்தால் கூட, உங்கள் பாட்டி இஞ்சி, வெல்லம், கலந்து மருந்தாக தருவதை பார்த்திருக்க வேண்டும். இதன் காரணமாக, சளி மற்றும் இருமல் சில நாட்களில் அடியோடு குணமாகிறது. உண்மையில், இஞ்சியில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகள் காணப்படுகின்றன. இருப்பினும், அதை அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
திப்பலி
திப்பலி மருந்து (Omicron)பொருளாகும். இதனை தேனுடன் சேர்த்து சாப்பிடலாம். இது தவிர கல் உப்பு சேர்த்தும் சாப்பிடலாம். இதை சாப்பிடுவதால் செரிமான சக்தி மேம்படும். நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் அதிகரிக்கிறது.