வாஷிங்டன்: பூமியைப் போலவே மனிதர்கள் வாழக்கூடிய பண்புகளைக் கொண்ட ஒரு சூப்பர் எர்த்தை ஆய்வாளர்கள் இப்போது கண்டுபிடித்து உள்ளனர்.
இந்த மிகப் பெரிய பால்வெளி மண்டலத்தில் பூமியில் மட்டும் தான் உயிரினங்கள் இருக்கும் என்ற கருத்தை பெரும்பாலான ஆய்வாளர்கள் ஏற்க மறுக்கின்றனர். பூமியைப் போலவே கண்டிப்பாக வேறு கிரகங்களிலும் உயிரினங்கள் வாழ வாய்ப்பு உள்ளது என்பதால் மற்ற கிரகங்களை ஆய்வாளர்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
சூப்பர்-எர்த்! மனிதர்கள் வாழக்கூடிய கச்சிதமான கிரகம் கண்டுபிடிப்பு!
கிரகம் பூமியைப் போன்ற ஒரு கிரகத்திற்கான தேடல் என்பது சூரியக் குடும்பம், பால்வீதி கேலக்ஸிகளையம் தாண்டிவிட்டது. இதனிடையே ஆய்வாளர்கள் இப்போது சூப்பர்-பூமியை ஒன்றைக் கண்டுபிடித்து உள்ளனர். ஆனால், இதில் உள்ள ஒரு பிரச்சினை என்னவென்றால், இந்த கிரகம் சுற்றுவட்டபாதையில் நேராகச் செல்லாமல் உள்ளேயும் வெளியேயும் மாறி மாறி செல்கிறது. இருப்பினும், மற்ற கிரகங்கள் உடன் ஒப்பிடுகையில் இதன் வெப்பம் குறைவாகவே உள்ளதால் இதில் உயிரினங்கள் இருக்கும் வாய்ப்புகள் அதிகம்.
தண்ணீர்
வரும் காலத்தில் ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் மூலம் இந்த கிரகத்தின் மேற்பரப்பில் நீர் இருக்கிறதா என்பதைக் கண்டறிய ஆய்வாளர்கள் நிச்சயம் முயல்வார்கள். Ross 508 b என்று அழைக்கப்படும் இந்த கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம். சூரியனைப் போன்ற நட்சத்திரத்தைத் தான் Ross 508 b சுற்றி வருகிறது. அந்த நட்சத்திரத்தில் இருந்து அது குறைவான தூரத்திலும் இருக்கக் கூடாது. தொலைவான தூரத்திலும் இருக்கக் கூடாது.
சரியான தொலைவு
ஏனென்றால் தூரம் குறைவாக இருந்தால் நீர் ஆவியாகிவிடும். தொலைவில் இருந்து உறைந்துவிடும். தண்ணீர் நீர் வடிவில் இருக்கும் போது தான், உயிரினங்கள் அங்குச் செழிக்கும். Ross 508 b சரியாக அந்த தூரத்தில் தான் இருக்கிறது. இது பூமியில் இருந்து 37 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இது சூரியனின் ஐந்தில் ஒரு பங்கு கொண்ட நட்சத்திரத்தைச் சுற்றி வருகிறது. இந்த கிரகம் பூமியின் நிறையை விட நான்கு மடங்கு பெரிதாகும்.
ஆய்வு அவசியம்
மேலும், பூமி-சூரியனுக்கு இடையே இருக்கும் தூரத்தை விடத் தூரத்தை விட 0.05 மடங்கு இதன் தூரம் அதிகமாக உள்ளது. பிரபஞ்சத்தில் உயிரினங்கள் இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டறிய இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த நட்சத்திரங்கள் தொலை தூரத்தில் இருப்பதால், இவை மிக எளிதாகச் சூரிய ஒளியில் தெரியாமல் போய்விடும். எனவே, இவை குறித்த தொடர்ச்சியான ஆய்வுகளை மேற்கொள்வது சிரமம்.
வாய்ப்பு அதிகம் இருப்பினும், வரும் காலத்தில் இதுபோன்ற நட்சத்திரங்களைக் குறிவைத்து ஆய்வுப் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நட்சத்திரங்களின் வெப்பநிலை குறைவாக இருப்பதே இதில் உயிரினங்கள் வாழ வாய்ப்புகள் அதிகம் என முடிவுக்கு வர முக்கிய காரணமாக உள்ளது. முன்னதாக ப்ராக்ஸிமா சென்டாரி பி என்ற கிரகத்திலும் இதேபோல உயிரினங்கள் வாழக்கூடிய பண்புகள் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.