STR 50: `நீங்க இல்லாம நான் இல்ல' - 50வது படத்தை தயாரிக்கும் சிம்பு - அடுத்தடுத்த அப்டேட்ஸ்| str 50 was produced by simbu cine arts

STR 50: `நீங்க இல்லாம நான் இல்ல’ – 50வது படத்தை தயாரிக்கும் சிம்பு – அடுத்தடுத்த அப்டேட்ஸ்| str 50 was produced by simbu cine arts


இப்படத்தை கமலின் `ராஜ்கமல் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். ஆனால், அத்திரைப்படம் அதன் பின்பு டேக் ஆஃப் ஆகாமல் இருந்தது. அத்திரைப்படம் தொடர்பாக எழுந்த வதந்திகளுக்கு தேசிங்கு பெரியசாமி அப்போது விளக்கமும் அளித்திருந்தார். பிறகு, அத்திரைப்படத்தின் தயாரிப்பு பணியிலிருந்து ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் விலகுவதாகத் தகவல்கள் வந்தன. அதனை உறுதி செய்யும் அறிவிப்பும் தற்போது வெளியாகியிருந்தது. சிம்புவுக்கு தேசிங்கு பெரியசாமியின் கதையில் நடித்தாக வேண்டும் என ஆசை இருப்பதால் அத்திரைப்படத்தை தானாகவே தயாரிக்க முன் வந்திருக்கிறார். அதற்காக `ஆத்மன் சினி ஆர்ட்ஸ்’ என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் தொடங்கியிருக்கிறார்.

இத்திரைப்படம் தொடர்பாக பதிவிட்டிருக்கும் சிம்பு,“ இறைவனுக்கு நன்றி! தயாரிப்பாளராக புதிய பயணத்தை தொடங்குவதில் மகிழ்ச்சி. இதனை தவிர என்னுடைய 50-வது திரைப்படத்தை தொடங்குவதற்கு சிறந்த வழி எதுவுமில்லை. எனக்கும் இயக்குநர் தேசிங்கு பெரியசாமிக்கும் இது கனவு திரைப்படம். நீங்க இல்லாமல நான் இல்ல.” எனக் குறிப்பிட்டிருக்கிறார். இதுமட்டுமின்றி அவர் மணி ரத்னம் – கமல் கூட்டணியில் உருவாகும் `தக் லைஃப்’ படத்தில் நடித்து முடித்துவிட்டார். இத்திரைப்படம் அவரின் 48-வது திரைப்படம் என்ற இடத்தைப் பிடித்துவிட்டது. ஆதலால், தேசிங்கு பெரியசாமி இயக்கும் திரைப்படம் சிம்புவின் 50-வது படம்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *