Bollywood: ஷாருக் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கறிஞர் கைது! | Lawyer arrested for threatening to kill Shah Rukh Khan!

SRK: 20 ஆண்டுகளாக வாழ்ந்த வீடு… தற்காலிகமாக காலி செய்யும் ஷாருக்கான்; காரணம் என்ன?


பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மும்பையில் வசிக்கும் பங்களாவின் பெயர் மன்னத் பங்களா. பாந்த்ரா கடற்கரை பகுதியில் இருக்கும் இப்பங்களா 100 ஆண்டுகள் பழமையானது ஆகும். மன்னர் காலத்தில் கட்டப்பட்ட இந்த மன்னத் பங்களா ஷாருக்கானின் கனவு இல்லமாக இருக்கிறது. இதனை வாங்கிய பிறகு முதல் முறையாக ஷாருக்கான் குடும்பத்தோடு வீட்டைக் காலி செய்ய இருக்கிறார் ஷாருக்கான்.

மன்னத் பங்களாவில் புதுப்பிப்பு மற்றும் விரிவுபடுத்திக் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. கூடுதலாக இரண்டு மாடிகள் கட்டப்பட இருக்கின்றன. இதையடுத்து வீட்டைக் காலி செய்துவிட்டு தற்காலிகமாக வேறு வீட்டில் ஷாருக்கான் குடியேறுகிறார்.

20250317112946Shah Rukh Khan to move out of Mannat Thedalweb SRK: 20 ஆண்டுகளாக வாழ்ந்த வீடு... தற்காலிகமாக காலி செய்யும் ஷாருக்கான்; காரணம் என்ன?

அதே பாந்த்ரா பகுதியிலுள்ள பாலிகில்லில் இருக்கும் பூஜா காசா என்ற ஆடம்பர அடுக்குமாடிக் கட்டிடத்தில் வாடகைக்கு வாங்கி இருக்கும் வீட்டில் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளோடு குடியேறுகிறார். பூஜா காசாவில் இரட்டை மாடிகளைக் கொண்ட இரண்டு வீடுகளை வாடகைக்கு எடுத்திருக்கிறார். அதாவது 1, 2 வது மாடிகள் மற்றும் 7,8 வது மாடிகளை வாடகைக்கு எடுத்திருக்கிறார். இக்கட்டிடம் தயாரிப்பாளர் வாசு பக்னானி மற்றும் அவரது மகள் தீப்ஷிகா, மகனும், நடிகருமான ஜாக்கி பக்னானி ஆகியோருக்குச் சொந்தமானது ஆகும்.

நடிகை ரகுல் பிரீத் சிங்கின் கணவர்தான் ஜாக்கு பக்னானி ஆவார். மன்னத் பங்களாவில் கட்டுமானப் பணிகள் வரும் மே மாதம் தொடங்க இருக்கிறது. அதற்கு முன்பு வீட்டைக் காலி செய்துவிட்டு ஷாருக்கான் புதிய வீட்டில் குடியேறுகிறார். மன்னத் புதுப்பிப்பு மற்றும் நீட்டித்துக் கட்டும் பணிகள் இரண்டு ஆண்டு வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இரண்டு ஆண்டுகள் ஷாருக்கான் புதிய வீட்டில் இருக்க வேண்டும் என்பதால் அதற்குத் தக்கபடி பெரிய வீடாக வாடகைக்கு எடுத்திருக்கிறார். அதோடு பாதுகாப்பு அம்சங்களும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகே இந்த வீடு வாடகைக்கு எடுக்கப்பட்டு இருக்கிறது.

மூன்று ஆண்டுகளுக்கு இந்த வீட்டை வாடகைக்கு எடுக்க ஷாருக்கான் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார். மன்னத் பங்களா புராதன சின்னம் என்பதால் அதில் புதுப்பிப்பு பணிகளை மேற்கொள்ள மாநகராட்சியின் புராதன சின்ன கமிட்டி மற்றும் மும்பை நீதிமன்றத்தில் ஷாருக்கான் தரப்பில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. மன்னத் பங்களா மொத்தம் 27 ஆயிரம் சதுர அடி கொண்டதாகும். ஆனால் இப்போது ஷாருக்கான் வாடகைக்கு எடுத்திருக்கும் வீடு 10,500 சதுர அடி கொண்டதாகும். இந்த வீட்டிற்கு முன்பணமாக 32.97 லட்சம் கொடுத்திருக்கும் ஷாருக்கான் ஒரு வீட்டிற்கு மாதம் 11.54 லட்சமும் மற்றொரு வீட்டிற்கு மாதம் 12.61 லட்சமும் வாடகையாகக் கொடுக்கிறார்.

ஷாருக் கான்
ஷாருக் கான்

ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்து இந்த வீட்டு வாடகை தொடங்குகிறது. மன்னத் பங்களாவிலிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் இந்த வீட்டுக்கு, குத்தகை ஒப்பந்தம் செய்து கொள்ள ஷாருக்கான் பதிவாளர் அலுவலகத்திற்குச் செல்லவில்லை. பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு பதிவாளர் நேரடியாக வீட்டிற்கே வந்து கடந்த மாதம் 14ம் தேதி பதிவு செய்து கொடுத்துவிட்டுச் சென்றார். புதிய வீடு இருக்கும் பகுதியில் பல அடுக்குமாடிக் குடியிருப்புகள் இருக்கின்றன. ஷாருக்கான் வீட்டிற்கு எதிர்த்திசையில் நடிகர் ராஜ்குமார் வீடு இருக்கிறது. இது தவிர கபூர் பங்களா மற்றும் நடிகர் சஞ்சய் தத் வீடுகளும் அருகிலேயே இருக்கின்றன. இப்பகுதியில் இரண்டு படுக்கை அறை கொண்ட ஒரு வீட்டின் மாத வாடகை மட்டும் ரூ.2 லட்சமாகும்.

வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

WhatsApp Image 2025 03 15 at 11.11.30 Thedalweb SRK: 20 ஆண்டுகளாக வாழ்ந்த வீடு... தற்காலிகமாக காலி செய்யும் ஷாருக்கான்; காரணம் என்ன?

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *