‘ஆப்பிள் பெண்ணே நீ யாரோ…’ என அவரது பாடல் கோலிவுட்டையே முணு முணுக்க வைத்து மியூசிக் சேனல்களில் ரிப்பீட் மோடில் ஓடிய பாடல்களாகும். சமீபத்தில் ஶ்ரீகாந்த் அதிகமாகப் படங்களில் நடிக்காமல் இருந்தார். தற்போது ‘உன்னை நான் சந்தித்தேன்’, ‘உதயகீதம்’, ‘உயிரே உனக்காக’, ‘கீதாஞ்சலி’, ‘நினைவே ஒரு சங்கீதம்’ உள்பட பல ஹிட் படங்களை இயக்கிய கே.ரங்கராஜ் இயக்கத்தில் ‘கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்’ படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் மார்ச் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் தனது திரைத்துறைப் பயணம் குறித்தும் தமிழ் சினிமாவின் இன்றைய நிலை குறித்தும் மனம் திறந்து பேசியிருக்கிறார் நடிகர் ஶ்ரீகாந்த். இதுகுறித்துப் பேசியிருக்கும் அவர், “நான் இந்தத் திரையுலகத்திற்கு வந்து 25 ஆண்டுகள் கடந்திருச்சு. என்னுடைய இந்தப் பயணத்துல என்னை வாழ்த்திய, விமர்சித்த, திட்டிய, ஆதரவு தந்த அனைவருக்கும் என் நன்றிகள்.
சமீபத்துல ஒரு பெரிய சம்பவம் நடந்தது. நான் பார்த்து வியந்த மிகப்பெரிய இயக்குநர் ஒருவர், படத்துல நடிச்சேன். அந்தப் படத்தோட ஷூட் வெளிநாட்டுல நடந்துச்சு. ஒருநாள் லோகேஷனுக்கு வாடகை மட்டும் 10 லட்சம் ரூபாய். காலையில 8 மணிக்கு ஷூட்டிங்குனு சொன்னாங்க. நான் காலையில 7 -7.40 மணிக்கெல்லாம் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துட்டேன். ஆனால், அந்த இயக்குநர் மாலை 3.30 மணிக்கு வந்தார். அந்த மாதிரியான இயக்குநர்களையெல்லாம் பார்த்திருக்கேன். இந்தப் படத்தோட இயக்குநர் கே.ரங்கராஜ் சார் 7 மணிக்கு ஷூட்டுக்கு 6.30 மணிக்கெல்லாம் செட்டுல இருப்பார். ரொம்ப அர்பணிப்போட வேலை பார்ப்பார். அவரைப் போல உழைப்பவர்களுக்கு எப்போதும் ஆதரவு தர வேண்டும்.