கடந்த சில நாட்களாக சிவகார்த்திகேயனின் 25வது படம் குறித்த செய்திகள் குறித்துத்தான் ஏகத்துக்கும் தகவல்கள் பரவி வருகின்றன. சுதா கொங்குரா இயக்கும் அந்த படத்தில் ஜெயம்ரவி, அதர்வா என பலரும் நடிக்கின்றனர். டெஸ்ட் ஷூட் கூட, நடந்து வருகிறது என்பது போன்ற தகவல்கள் உலா வருகின்றன.