பிறந்த நாளுக்கு கமல் ஹாசன் சிவகார்த்திகேயனை வாழ்த்தி தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில் அவர், “தன் தனித்திறமையால் மக்களை மகிழ்விப்பதில் தம்பி சிவகார்த்திகேயன் காட்டும் உழைப்பும், சினிமாவின் மீதான அவரது காதலும் என்றென்றும் தொடரட்டும், வெற்றிகள் குவியட்டும் எனப் பிறந்தநாளில் வாழ்த்தி மகிழ்கிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

சமீபத்தில் நடைபெற்ற `அமரன்’ திரைப்படத்தின் 100-வது நாள் கொண்டாட்ட விழாவில் கமல் ஹாசன், “ படத்திற்காக சிவகார்த்திகேயன் தன்னைச் செதுக்கிக் கொண்டார். உடலை ஏற்றுவது என்பது எவ்வளவு கடினம் என்பதைப் புரிந்து கொண்டு உழைத்திருந்தார். `ஊதா கலர் ரிப்பனா இது, இப்படி உடலை ஏற்றியிருக்கிறார்’ என என்னை ஆச்சரியப்படுத்தினார். நான் அட்வான்ஸ் கொடுக்கும்போது இருந்த சிவகார்த்திகேயன் வேறு. படத்தில் நடித்த சிவகார்த்திகேயன் வேறு” எனப் புகழாரம் சூட்டியிருந்தார்.