அவர், “முருகதாஸ் சார் இயக்கத்தில் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு 90 சதவிகிதம் முடிந்துவிட்டது. இன்னும் 7,8 நாட்கள் ஷூட் மட்டுமே மீதமிருக்கிறது. முருகதாஸ் சார் தற்போது சல்மான் கான் திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். அந்தப் படத்தை முடித்த பிறகு இந்தப் படத்திற்கான வேலைகளையெல்லாம் தொடங்கிவிடுவோம். அத்திரைப்படம் ஒரு கமர்ஷியல் ஆக்ஷன் திரைப்படம்தான். ஆனால், அது வழக்கமான பாணியில் இருக்காது. சுதா கொங்கரா மேம் இயக்கத்தில் உருவாகும் படத்தின் பணிகளைத் தொடங்கிவிட்டோம். புரோமோ ஷூட் முடிந்துவிட்டது. அதுவொரு பிரீயட் திரைப்படம், பெரிய ஸ்கேலில் உருவாகவிருக்கிறது. படத்தில் ஜெயம் ரவி சார் வில்லனாக நடிக்கிறார்.

ஜெயம் ரவி சார் எனக்கு சீனியர். அவருடைய திரைப்படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் இத்திரைப்படத்தில் இணைந்து நடிக்கப்போகிறேன். நாங்கள் சண்டையிடப் போகிறோம் ( சிரிக்கிறார்). இந்தி திரைப்படத்திற்கான பேச்சுகள் நடந்தன. ஆனால், தேதி போன்றவற்றால் அவை சரியாகக் கைகூடவில்லை. நான் சில முறை அமீர் கான் சாரை சந்தித்திருக்கேன். என்னுடைய முதல் இந்தி திரைப்படம் அவருடைய தயாரிப்பில்தான் வரவேண்டும் என என்னிடம் கூறினார். அதுமட்டுமல்ல, எதுவும் கதைகள் இருந்தாலும் அதை என்னிடம் கொண்டு வாருங்கள் எனக் கூறியிருக்கிறார். ” என்றார் எஸ்.கே.