இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் பாலிவுட்டில் “சிக்கந்தர்’ படத்தை இயக்கி இருக்கிறார். இந்தப் படத்தில் சல்மான் கானும், ராஷ்மிகா மந்தனாவும் நடித்திருகின்றனர்.
நாளை ( மார்ச் 30) இத்திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் படக்குழுவினர் தொடர்ந்து புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சல்மான் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில், “தென்னிந்திய நடிகர்களின் படங்களை நாங்கள் பார்க்கிறோம். ஆனால் எங்களின் படங்களை அவர்கள் பார்ப்பதில்லை” என்று கூறியிருக்கிறார்.