ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புடன் இன்று திரையரங்குகளில் வெளியானது சல்மான் கானின் சிக்கந்தர் திரைப்படம். வெளியாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னரே ஆன்லைனில் பல பைரேட்டட் வலைதளங்களில் இந்த படம் கிடைப்பது பலருக்கும் ஏமாற்றமளித்துள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான சிக்கந்தர், Tamilrockers, Movierulz, Filmyzilla போன்ற பிரபலமான சட்டவிரோத வலைதளங்களிலும் பல்வேரு டெலிகிராம் குழுக்களிலும் லீக் ஆகியுள்ளது.

இவற்றில் சட்டத்துக்குப் புறம்பாக திரைப்படத்தை டவுன்லோட் செய்யவும் ஆன்லைனில் பார்க்கவும் முடிகிறது.
திரைப்படங்களை திருட்டுத்தனமாக வெளியிடுவதற்கு எதிராக கடுமையான சட்டங்கள் இருந்தபோதிலும், சட்டவிரோத ஸ்ட்ரீமிங் தளங்களுக்கு எதிராக தொடர்சியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுவந்தபோதிலும் பாலிவுட்டில் திரைப்படங்கள் திருட்டுத்தனமாக கசிவது பெரும் பிரச்னையாக உள்ளது.
தென்னிந்திய படங்களிலும் இந்தியில் முதல் நாள் வெளியாகும் படங்கள் எளிதாக லீக் ஆகிறது எனக் குற்றச்சாட்டு உள்ளது.
சிக்கந்தர் விவகாரத்தில் திரைப்படம் தியேட்டரில் கேமராவால் ரெக்கார்ட் செய்யப்பட்டு, பின்னர் விரைவாக ஹெச்.டி தரத்தில் மேம்படுத்தப்பட்டு லீக் செய்யப்பட்டுள்ளதாக இந்தியா டுடே தளம் தெரிவிக்கிறது.
ரசிகர்கள் கொண்டாட்டம்
Sikandar celebration Skfc bhubaneswar#SalmanKhan #Sikandar #@BeingAryan2708 @BeingSalmanKhan @WardaNadiadwala @NGEMovies pic.twitter.com/nfzNBKUxrP
— AQUIB AHMAD (@Akibahmed78612) March 30, 2025
சல்மான் கானின் திரைப்படம் ஈகைத் திருநாளை ஒட்டி வெளியாகியிருப்பதால் ரசிகர்களின் பேராதரவு கிடைத்துள்ளது.
முதல்நாளில் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குக்கு வெளியில் படத்தைப் பார்பதற்காக காத்திருக்கும் காட்சிகளை சமூக வலைதளங்களில் காண முடிகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரையரங்க கொண்டாட்ட வீடியோக்கள் பரவி வருகின்றன.
Sikandar
சிக்கந்தர் சல்மான் கானுக்கும் ஏ. ஆர். முருகதாஸுக்கும் முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது. இதில் ராஷ்மிகா மந்தனா, சத்யராஜ், காஜல் அகர்வால், ஷர்மன் ஜோஷி ஆகியோர் நடித்துள்ளனர்.