null
Shah Rukh Khan: `கிங்' - ஷாருக் கானுடன் இரண்டாது முறையாக இணையும் இயக்குநர்

Shah Rukh Khan: `கிங்' – ஷாருக் கானுடன் இரண்டாது முறையாக இணையும் இயக்குநர்


ஷாருக் கானுக்கு ஒரு குறுகிய இடைவெளிக்குப் பிறகு கடந்த 2023-ம் ஆண்டு மூன்று திரைப்படங்கள் வெளியாகின.

`பதான்’, `ஜவான்’, `டங்கி’ என வெளியான மூன்று படங்களுக் ஹிட்டடித்து வசூலை அள்ளின. இதன் பிறகு, கடந்த 2024-ம் ஆண்டு இவர் நடிப்பில் எந்தத் திரைப்படமும் வெளியாகவில்லை. ஆனால், இவர் அடுத்ததாக நடிக்கப்போகும் திரைப்படங்கள் குறித்தான செய்திகள் மட்டும் கிசு கிசு-வாக பேசப்பட்டு வந்தது.

எத்திரைப்படமும் வெளியாகவில்லை என ரசிகர்களிடம் ஏக்கம் இருந்த சமயத்தில் `கொஞ்சம் இருங்க பாய்’ மொமன்ட்டைப் போல `முஃபாசா’ திரைப்படத்தின் இந்தி மொழி பதிப்பிற்கு டப்பிங் கொடுத்திருந்தார். இதனை தொடர்ந்து இவர் அடுத்ததாக `கிங்’ என்ற திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தை பாலிவுட் இயக்குநர் சுஜாய் கோஷ் இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் எதுவும் வெளிவரவில்லை.

shahrukh Thedalweb Shah Rukh Khan: `கிங்' - ஷாருக் கானுடன் இரண்டாது முறையாக இணையும் இயக்குநர்
Shah rukh Khan

தற்போது தன்னுடைய அடுத்த திரைப்படம் தொடர்பாக துபாயில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பேசியிருக்கிறார் ஷாருக் கான். தனது வழக்கமான நகைச்சுவை பாணியிலேயே பேசிய ஷாருக்கான், “ இன்னும் சில மாதங்களில் மும்பையில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. சித்தார்த் ஆனந்த்தான் என்னுடைய இயக்குநர். அவர் மிகவும் கண்டிப்பானவர். இதற்கு முன்பு `பதான்’ படத்தை இயக்கியவர். அதனால்தான் அவர் கண்டிப்பானவர். படத்தை பற்றி வெளியில் சொல்ல வேண்டாம் என அவர் சொல்லியிருக்கிறார். அதனால் அதைப் பற்றி வேறு எதையும் சொல்ல முடியாது. ஆனால், ஒரு விஷயம் உறுதி. அத்திரைப்படம் நிச்சயமாக உங்களை என்டர்டெயின் செய்யும். ” எனக் கூறியிருக்கிறார்.

இதன் பிறகு அந்த மேடையில் தன்னுடைய பாடல்களுக்கு துள்ளலான நடனமும் ஆடினார் ஷாருக்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *