Shah Rukh Khan: "உங்களுடன் போட்டிப்போடுவது கடினம்..." - தென்னிந்திய நடிகர்கள் குறித்து ஷாருக்கான் | shah rukh khan talks about south indian actors dance

Shah Rukh Khan: “உங்களுடன் போட்டிப்போடுவது கடினம்…” – தென்னிந்திய நடிகர்கள் குறித்து ஷாருக்கான் | shah rukh khan talks about south indian actors dance


துபாயில் நடந்த குளோபல் வில்லேஜ் நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கலந்துகொண்டு உரையாற்றியிருக்கிறார். அது தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகிவருகிறது.

அந்த வீடியோவில், “எனக்குத் தென்னிந்தியாவில் நிறைய நண்பர்கள் உள்ளனர். அல்லு அர்ஜுன், பிரபாஸ், ராம் சரண், யாஷ், மகேஷ் பாபு, விஜய், ரஜினி சார், கமல் சார்… ஆகியோரிடம் எனக்கு ஒரு வேண்டுகோள் இருக்கிறது. இவ்வளவு வேகமாக நடனமாடுவதை நீங்களெல்லாம் நிறுத்த வேண்டும். அவர்களுடன் தொடர்ந்து போட்டிப்போட்டுக்கொண்டு நடனமாடுவது எனக்குக் கடினமாக இருக்கிறது” எனச் சிரித்துக்கொண்டே பேசினார்.

ஷாருக்கான்

ஷாருக்கான்

தொடர்ந்து பேசிய அவர், “என் அடுத்த படமான கிங் வித் பதானுக்கு மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இயக்குநர் சித்தார்த் ஆனந்த் மிகவும் கண்டிப்பானவர். படம் குறித்து வெளியே பேச வேண்டாம் என அவர் கண்டிப்புடன் கூறிவிட்டார். அதனால் நான் மேலதிக தகவல்களை உங்களுக்குச் சொல்ல முடியாது. ஆனால் அந்தப் படம் உங்களுக்குப் பிடிக்கும் என உறுதியளிக்கிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஷாருக்கான் மகள் சுஹானா கான், அபிஷேக் பச்சன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள் எனக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *