Selvaraghavan: "அமைதி, அமைதி... யாரிடமும் உதவி கேட்காதிங்க; அப்புறம்.." - செல்வராகவனின் வைரல் வீடியோ

Selvaraghavan: "அமைதி, அமைதி… யாரிடமும் உதவி கேட்காதிங்க; அப்புறம்.." – செல்வராகவனின் வைரல் வீடியோ


‘காதல் கொண்டேன்’, ‘7ஜி ரெயின்போ காலனி’, ‘புதுப்பேட்டை’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘மயக்கம் என்ன’ போன்ற பல கல்ட் கிளாசிக் திரைப்படங்களை இயக்கியவர் செல்வராகவன்.

நீண்ட நாள்களுக்குப் பிறகு ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘என். ஜி. கே’, ‘நானே வருவேன்’ படங்களை இயக்கியவர், சமீபகாலமாகத் திரைப்படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் தனுஷ் இயக்கிய ‘ராயன்’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது 7ஜி ரெயின்போ காலனி’ பாகம் இரண்டு பட பணிகளில் இறங்கியிருக்கிறார். ‘ஆயிரத்தின் ஒருவன்’ பாகம் இரண்டும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறது.

இதற்கிடையில் இஸ்டாகிராமில் அவ்வப்போது தான் நினைக்கும் விஷயங்களை, வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்து வரும் செல்வராகவன், அமைதியாக வேலை பாருங்கள் என்றும் யாரிடமும் உதவி கேட்காதீர்கள் என்றும் பேசியிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

செல்வராகவன், “நீங்கள் ஒரு லட்சியம் வைச்சிருங்கீங்க. அதை நோக்கி ஓடிட்டு இருக்கீங்கனா நல்லதுதான். அதை ஏன் ஊரெல்லாம் தம்பட்டம் அடிக்கிறீங்க. வர்றவுங்க, போறவுங்க என எல்லார்கிட்டையும் ‘நான் என்ன செய்ய போறேன் தெரியுமானு’ சொல்லிச் சொல்லி அந்த காரியம் விளங்காம போயிடும்.

நீங்க சொன்னா சந்தோஷ படுவாங்கனா நினைக்கிறீங்க. இந்த உலகத்துல யாரும், எதுக்காகவும் மற்றவங்களைப் பார்த்து சந்தோஷப்படுவதில்லை. அமைதியா இருங்க, அமைதியாக வேலை செய்யுங்க. அமைதியாக போங்க, அமைதியாக வாங்க. உங்க லட்சியத்தை யார்கிட்டையும் சொல்லாதீங்க, ஏன் வீட்டுல கூட சொல்லி தம்பாட்டம் அடிக்காதீங்க.

New Project 11 Thedalweb Selvaraghavan: "அமைதி, அமைதி... யாரிடமும் உதவி கேட்காதிங்க; அப்புறம்.." - செல்வராகவனின் வைரல் வீடியோ
செல்வராகவன்

அதேமாதிரி யார்கிட்டையும், எதுக்காகவும் உதவி கேட்டு நிக்காதீங்க. சின்ன உதவி பண்ணாலும், ஆயுசு முழுக்கச் சொல்லிச் சொல்லிக் காண்பிப்பாங்க. ‘என்னாலதான் அவன் பெரிய ஆளானான், அவனுக்கு நான் இந்த உதவி பண்ணியிருக்கேன் தெரியுமா’ என ஒன்ரையணாவுக்கு உதவி பண்ணிட்டு ஆயிரம் கோடிக்கு உதவு பண்ண மாதிரி பேசுவாங்க” என்று மனம் விட்டு பேசி காணொலி ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

WhatsApp Image 2025 02 22 at 19.50.16 Thedalweb Selvaraghavan: "அமைதி, அமைதி... யாரிடமும் உதவி கேட்காதிங்க; அப்புறம்.." - செல்வராகவனின் வைரல் வீடியோ





Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *