இயக்குநர் சீனு ராமசாமி தனது மனைவியை பிரிவதாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் சீனு ராமசாமி – ஜி.எஸ்.தர்ஷனா தம்பதியின்17 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வருகிறது.
இதுகுறித்த அவரது பதிவில், “அன்பானவர்களுக்கு வணக்கம் நானும் எனது மனைவி G S தர்ஷனாவும் எங்கள் 17 வருட திருமண வாழ்வில் இருந்து விடைபெறுகிறோம்.
இருவரும் விருப்ப விவாகரத்து பெற்று அவர் அவருக்கு உண்டான திசையில் பயணிக்கவும் அந்த பாதையில் தர்ஷனாவின் செயல்பாடுகள் என்னையும், எனது செயல்பாடுகள் அவரையும் எவ்விதத்திலும் சேராது, பொறுப்பாகாது என்பதை நான் அறிவேன். அவரும் அறிவார்.” என எழுதியுள்ளார்.