Seeman: "இன்னும் எத்தனை காலத்துக்குத்தான்" -மனம் திறந்து பேசிய சீமான் seeman about Prabhakaran and caste violence

Seeman: “இன்னும் எத்தனை காலத்துக்குத்தான்” -மனம் திறந்து பேசிய சீமான் seeman about Prabhakaran and caste violence


தலைவருக்குப் பிடித்த இயக்குநர்

தலைவர் அவர்களைச் சந்தித்தபோது, அவர் என்னிடம் தமிழ் சினிமா இயக்குநர் குறித்துப் பேசினார். அப்போது, “எத்தணையோ பேர் கதை, வசனம் எழுதி படம் எடுக்கிறீர்கள், ஆனால் பாலு மகேந்திரா மாதிரி ஏன் எடுக்க முடியவில்லை” என்று என்னிடம் கேட்டார். இருவரும் ஒரே ஊர் என்பதால் அதை ஊர் பாசம் என்று நினைத்துக் கொண்டேன்.

தேவையற்ற சிறு நகர்கவுகள், காட்சிகள், வசனங்கள் எதுவும் இல்லாமல் கச்சிதமாக இருக்கும் பாலு மகேந்திரவின் திரைப்படங்கள்.

சாதிக்கு எதிராகப் பேசும் ‘பேரன்பும் பெருங்கோபமும்’ படம்

இப்படம் சாதிக்கு எதிராகப் பேசுகிறது. சாதிவெறி, ஆணவம் கொண்ட கூட்டத்திடம் பேரன்பு கொண்ட காதலர்கள் சிக்கிக் கொண்டால் என்ன ஆகும், பேரன்பு கொண்ட காதலன் பெருங்கோபம் கொண்டால் என்ன ஆகும் என்பதுதான் இப்படத்தின் கதை. ‘இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் சாதி என்கிற சனியனை வச்சு எங்கள சாகடிப்பீங்க’ என்று அன்பு கொண்ட நெஞ்சங்கள் கெஞ்சுவதுதான் இந்தப் படம். நல்ல படத்திற்கு தயவு செய்து ஆதவு கொடுங்கள்” என்று பேசியிருக்கிறார் சீமான்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *