Sawadeeka: "அஜித் 102 டிகிரி காய்ச்சலோடு டான்ஸ் பண்ணார்" - 'விடாமுயற்சி' கல்யாண் மாஸ்டர் பேட்டி

Sawadeeka: “அஜித் 102 டிகிரி காய்ச்சலோடு டான்ஸ் பண்ணார்” – ‘விடாமுயற்சி’ கல்யாண் மாஸ்டர் பேட்டி


‘பில்லா’, ‘வேதாளம்’, ‘விவேகம்’, ‘விஸ்வாசம்’, ‘துணிவு’ன்னு அவருடைய பாடல்கள் என்னோட வாழ்க்கையில முன்னேறுவதற்கு எந்தளவுக்கு துணையா இருந்துச்சுன்னு சொல்லிக்கிட்டே போகலாம். ‘உயிரோடு உயிராக’ தொடங்கி எத்தனையோ பாடல்களுக்கு டான்ஸ் மாஸ்டரா பணியாற்றியிருந்தாலும் அவர் என்னை, அதிகமா பாராட்டினது ‘ஆலுமா டோலுமா’ பாட்டுக்காகத்தான்.

நண்பரா இருந்தாலும் திறமைக்குத்தான் முக்கியத்துவம் தருவார். அதனாலதான், அவர்க்கூட தொடர்ந்து பயணிக்கமுடியுது. அவரோட விடாமுயற்சியான விஷயங்கள்ன்னா பைக் ரேஸ் மீதான காதல்தான். அந்த காலத்திலிருந்தே விடாமுயற்சியா பண்ணிக்கிட்டிருக்கார். பைக் ரேஸ்ன்னாலே அதிகமா செலவாகும். தன்னோட சொந்த காசுல பைக் ரேஸ் போறது மட்டுமில்லாம, அதை டீமா உருவாக்கி என்கரேஜ் பண்ணிக்கிட்டிருக்கார். அது, ரொம்ப பாராட்டப்பட வேண்டிய விஷயம். ஒரு விஷயத்தை பண்ணனும்னு நினைச்சா அதைக் கண்டிப்பா பண்ணிடுவார்.

விடாமுயற்சி

விடாமுயற்சி
Sarpana B.

பைக் ரேஸ் மீதான காதலை இப்போவரைக்கும் அவர் விட்டுக்கொடுக்கல. எப்போதும் அதை நேசிச்சுக்கிட்டே இருக்கார். அப்படிப்பட்ட தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் கொண்ட மனிதரோடு பயணிச்சுக்கிட்டிருக்கேன். அதேமாதிரி, சினிமாவையும் ரொம்ப நேசிக்கிறார். எந்தளவுக்குன்னா, புரடியூசர் நம்பளால கஷ்டப்படக்கூடாது; நஷ்டப்படக்கூடாதுன்னு ரொம்ப கவனமா இருப்பார். உடம்பு சரியில்லைனாகூட நம்பளால ஷூட்டிங் பாதிக்கப்படக்கூடாதுன்னு முடிச்சுக் கொடுத்துடுவார்.

விடாமுயற்சி ‘ஸ்வதீகா’ பாட்டு பண்ணும்போது, அஜித் சாருக்கு 102 டிகிரியில் காய்ச்சல். இருமிக்கிட்டே இருந்தார். நாங்ககூட ரெஸ்ட் எடுக்கச் சொன்னோம். ’40 டான்ஸர்கள் இருக்காங்க. இத்தனை டெக்னீஷியன்கள் பாதிக்கப்பட்டுடக்கூடாது. நான், அரைமணிநேரத்துல வந்துடுறேன்’னு ஆன்டி பயாடிக் மாத்திரைகளை எடுத்துக்கிட்டு காய்ச்சலோடே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து நின்னுட்டார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *