null
Santhosh Narayanan: `கண்ணாடி பூவே' இதுதான் நான் பண்ண விரும்பும் பாடல் - சந்தோஷ் நாராயணன்

Santhosh Narayanan: `கண்ணாடி பூவே' இதுதான் நான் பண்ண விரும்பும் பாடல் – சந்தோஷ் நாராயணன்


சூர்யாவின் 44வது படத்தை இயக்கியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.

ஒருபக்கம் ‘சூர்யா 44’ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள், இன்னொரு பக்கம் ஆர்.ஜே.பாலாஜியின் ‘சூர்யா 45’க்கான படப்பிடிப்பு பொள்ளாச்சி, கோவை பகுதிகளில் மும்முரமாகியிருக்கின்றன. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 44 வது படமான ரெட்ரோவில்  பூஜா ஹெக்டே, மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ், சுஜித் சங்கர், நாசர், ‘டாணாக்காரன்’ தமிழ் எனப் பலரும் நடித்துள்ளனர். 

1739755021maxresdefault Thedalweb Santhosh Narayanan: `கண்ணாடி பூவே' இதுதான் நான் பண்ண விரும்பும் பாடல் - சந்தோஷ் நாராயணன்
ரெட்ரோ

சந்தோஷ் நாரயணின் இசையில் ‘love laughter war’ என காதலும், கோபமுமாக இத்திரைப்படம் உருவாகியிருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் காதல் பாடலான ‘கண்ணாடி பூவே…” வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

‘கால் போகாதடி நீ விட்டாலுமே நான் உன்னோடு தான் தீ சுட்டாலுமே’, உன் முகம் பாக்கும் நாளாச்சே வாழவே ஆசையாச்சே’ என காதல் ஏக்கத்தை பாடலாசிரியர் விவேக் அற்புதமாகக் கடத்த, சந்தோஷ் நாராயணன் மனதைத் தொடும் இசையை பாடலெங்கும் பரவ விட்டிருப்பார். நீண்ட நாள்களுக்குப் பிறகு சந்தோஷ் நாராயண் மீண்டும் காதலில் களமிறங்கி ஹிட் கொடுத்திருக்கிறார்.

இப்பாடலுக்கு ரசிகர்களிடையே கிடைத்த வரவேற்புக் குறித்து நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கும் சந்தோஷ் நாராயணன், ” ‘கண்ணாடி பூவே…’ என் மனதுக்கு மிகவும் நெருக்கமான பாடல். ஒருசில படங்களுக்கு மட்டுமே இதுபோன்ற நான் இசையமைக்க விரும்பும் பாடல் அமைக்கின்றன. நான் இசையமைக்க விரும்பும் இப்படியான பாடல்களுக்கு வரவேற்பு கிடைப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. ஒரு கலைஞனுக்கு இதைவிடவும் வேறென்ன மகிழ்ச்சி கிடைத்துவிடப் போகிறது. இன்னும் பல புதிய புதிய முயற்சிகளில் பாடலுக்கு இசையமைக்க இது ஒரு பெரிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது” என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.





Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *