அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ’சிட்டாடெல்: ஹனி பனி’ வெப் சீரீஸ்ர் வெளியாகி இருக்கிறது. ஹாலிவுட்டில் ஹிட்டடித்த இந்த வெப் சீரிஸில் நடிகர் வருண் தவான், நடிகை சமந்தா உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். ’தி ஃபேமிலி மேன்’ புகழ் ராஜ், டிகே இயக்கத்தில் ரூஸோ பிரதர்ஸ் தயாரிப்பில் வெளியாகி இருக்கும் இந்த வெப்சீரிஸ் புரொமோஷன் நிகழ்ச்சி நடந்தது. இந்த வெப் சீரிஸில் ரகசிய ஏஜென்டாகவும், அம்மாவாகவும் நடிகை சமந்தா நடித்திருக்கிறார்.
இந்த நிலையில், தனியார் செய்தி சேனல் ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய சமந்தா, சிட்டாடல்: ஹனி பன்னியில் தாயாக நடித்ததைப் பற்றி பகிர்ந்துகொண்டார். அப்போது, “ நான் தாய்மையடைய இன்னும் தாமதமாகவில்லை. எனக்கு தாய்மையடையும் கனவு இன்னும் இருக்கிறது. உண்மையில் தாயாக இருப்பதை மிகவும் நேசிக்கிறேன். நான் எப்போதும் அம்மாவாக இருக்கவே விரும்புகிறேன். அது மிக அற்புதமான அனுபவம். அந்த அனுபவத்துக்காக காத்திருக்கிறேன். மக்கள் வயதாவதை நினைத்து வருத்தப்படுகிறார்கள். உண்மையில் தாய்மையடைய வயது ஒரு தடையில்லை. ஒருவர் வாழ்க்கையில் தாய்மையடைய முடியாத காலம் என ஒன்றும் இல்லை.
சிட்டாடல்: ஹனி பன்னியில் நடித்த குழந்தையுடன் பழகியது, என் சொந்த குழந்தையுடன் பழகுவது போலவே உணர்ந்தேன். நான் இப்போது என் வாழ்க்கையில் அடைந்திருக்கும் இடத்துக்காக மிகவும் மகிழ்கிறேன்.
நான் எதில் கவனம் செலுத்த வேண்டும், எது எனக்கு முக்கியம் என்பதெல்லாம் எனக்கு இப்போது தெளிவாக தெரியும். அதனால், இப்போது இருக்கும் இந்த நிலையை அடைந்ததற்கு உண்மையில் நான் மகிழ்கியடைகிறேன். ஒவ்வொரு நாளும் எனக்கு முழுமையாக கிடைக்கிறதே… அதற்காகவே நான் ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன். இதற்கு முன்பு சாதாரண நாளுக்காக நான் இவ்வளவு நன்றியுடையவளாக இருந்ததில்லை. ஆனால், இப்போது அப்படி இல்லை. அனைத்துக்கும் நன்றியுடையவளாக இருக்கிறேன்.” என்று தெரிவித்தார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU