“சதா வைல்டு லைஃப் போட்டோகிராபி’, ‘சதா வைல்டு ஸ்டோரி’ என்ற பெயரில் சோஷியல் மீடியாக்களில் சதா வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மில்லியன் கணக்கான வியூவ்ஸ்களைக் கடந்து வருகின்றன. யானை, புலி, சிறுத்தை மட்டுமின்றி ராஜ நாகம் போன்ற பாம்புகள், போரடைஸ் ஃபிளை கேச்சர் போன்ற பறவைகளையும் படம் பிடித்து வருகிறார்.

சதாவை முன்மாதிரியாக கொண்டு கர்நாடகாவில் பல பெண்கள் காட்டுயிர் புகைப்பட கலைஞர்களாக உருவாகி வருகின்றனர். கர்நாடகாவின் பந்திப்பூர் உள்ளிட்ட தேசிய பூங்காக்களில் பல பெண்கள் துணிச்சலாகவும் தைரியத்துடனும் காட்டுயிர்களை படம் பிடித்து வருகின்றனர். நடிகை சதாவால் காட்டுயிர் புகைப்பட கலைஞராகவும் ஆர்வலர்களாகவும் மாறிய பெண்கள் பலரும் காடுகள் தினமான இன்று சதாவிற்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.