அப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் கடந்துவிட்டதைக் கொண்டாட `சச்சின்’ திரைப்படம் இந்தாண்டு கோடையில் ரீ ரிலீஸ் செய்யப்படும் என தயாரிப்பாளர் தானு சமீபத்தில் அறிவித்திருந்தார். ரீ ரிலீஸ் டிரெண்டில் கடந்தாண்டு வெளியான பல திரைப்படங்களும் ஹிட்டடித்திருந்தது. `கில்லி’, `3′ போன்ற திரைப்படங்களுக்கெல்லாம் மக்களின் ஏகோபித்த வரவேற்பும் கிடைத்திருந்தது.
`சச்சின்’ திரைப்படம் ரீ ரிலீஸாகவிருக்கிறது என அறிவிப்பு வந்ததும் ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சியில் ரீ ரிலீஸ் தொடர்பான அறிவிப்பு போஸ்டரை அதிகளவில் பகிர்ந்தனர். தற்போது நடிகை ஜெனிலியாவும் தயாரிப்பாளரின் அறிவிப்பு பதிவுக்கு பதில் பதிவு ஒன்று போட்டிருக்கிறார். அந்தப் பதிவில் அவர், “ சச்சின் திரைப்படத்திற்கு என்றும் என் மனதில் இடமுண்டு. சச்சின் படத்திற்கு என்னை தேர்ந்தெடுத்ததற்கு நன்றி சார். படப்பிடிப்பு நாட்களும் முழுவதும் என்னை நல்லபடியாக பார்த்துக் கொண்டதற்கு நன்றி. இதுவரை நான் பங்கேற்ற சிறந்த படப்பிடிப்புகளில் இதுவும் ஒன்று!” எனப் பதிவிட்டிருக்கிறார்.