இது குறித்து எஸ்.ஏ.சி, “எனக்குத் திருமணம் ஆகி 52 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த 52 ஆண்டுகளாக எவ்வளவோ பிரச்னைகள் இருந்துள்ளன. நான் அவளை எவ்வளவோ தொந்தரவுகள் செய்து இருக்கிறேன்.
தொல்லைகள் கொடுத்திருக்கிறேன். இவை அனைத்தையும் தாங்கிக் கொண்டு ஒரு பெண் என்னுடன் இத்தனை ஆண்டுக் காலம் வாழ்ந்திருக்கிறாள் மகிழ்ச்சியாக.
அதை நினைக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது.
திருமணமான புதிதில் மனைவிக்குப் பரிசு கொடுப்பது எல்லாம் சாதாரணமான விஷயம்.
ஆனால் இந்த 52 ஆண்டுக் கால வாழ்க்கையை நினைத்து என் மனைவிக்கு நான் ஒரு பிஎம்டபிள்யூ கார் பரிசளித்திருக்கிறேன் அவளது மகிழ்ச்சிக்காக. இதை நினைத்து நான் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்” எனக் கூறியிருக்கிறார்.