Rohini: `பாலியல் புகாருக்கு உள்ளானவர்கள் 5 ஆண்டுகள் சினிமாவில் நடிக்க தடை' - நடிகை ரோகிணி | Actress rohini speech at press meet after nadigar sangam meeting

Rohini: `பாலியல் புகாருக்கு உள்ளானவர்கள் 5 ஆண்டுகள் சினிமாவில் நடிக்க தடை’ – நடிகை ரோகிணி | Actress rohini speech at press meet after nadigar sangam meeting


இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் நடிகர் சங்க தலைவர் நாசர் பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ் மற்றும் ரோகிணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர். அதில் விசாகா கமிட்டி அமைத்து சில பிரச்னைகளை தீர்த்து வைத்துள்ளதாகவும், ஏதேனும் பாலியல் ரீதியிலான தொல்லைகள் இருந்தால் தொடர்பு கொள்ளலாம், நிச்சயம் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தீர்வுகள் காணப்படும் என்றும் நடிகர் நாசர் தெரிவித்திருந்தார்.

பொதுக்குழு கூட்டம் பொதுக்குழு கூட்டம்

பொதுக்குழு கூட்டம்

இதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் நடிகர் சங்கம் அமைத்த விசாகா குழுவின் தலைவரான நடிகை ரோகிணி பேசியபோது, ” நடிகர் சங்கத்தின் சார்பில் 2019-லேயே விசாகா கமிட்டியை உருவாக்கி விட்டோம். அதன் பிறகு சில புகார்கள் வந்தது. அதை நாங்கள் தீர்த்தும் வைத்திருக்கிறோம். தற்போது சில விஷயங்கள்( ஹேமா கமிட்டி) பூதாகரமாகி இருக்கும் நிலையில், நாங்கள் இன்னும் விசாரனைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று தீர்மானித்து இருக்கிறோம். இந்த கமிட்டியில் நடிகர், நடிகைகள் மட்டுமன்றி யார் வேண்டுமானாலும் புகார் கொடுக்கலாம்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *