Table of Contents
முடி கருமைக்கும் (Rice wash for hair)அடர்த்திக்கும் உதவும் அரிசி கழுவிய நீர்
ஷாம்பூ, கண்டிஷனர், ஸ்பா போன்றவற்றால் மட்டுமே தலைமுடியை அழகாக்க முடியும் என்றெல்லாம் இல்லை. நமது சமையல் அறையிலேயே நமது தலைமுடிக்கு பாதுகாப்பு தரும் அம்சங்களும் அடங்கியுள்ளன. உண்மைதான் சாதாரண அரசி கழுவிய நீரிலேயே கூட தலைமுடியை செழிப்பாக்க முடியும். Rice wash for hair
![Rice wash for hair 1 Rice wash for hair](https://thedalweb.com/wp-content/uploads/2022/08/water_Large-1024x768.jpg)
அரிசி கழுவிய தண்ணீர் நமது தலைமுடிக்கு பல நல்லது செய்கிறதாம். அதெப்படி என்று உங்களுக்கு ஆச்சரியம் வரலாம். ஆனால் உண்மையில் அரிசி தண்ணீரில் அத்தனை நல்லது இருக்கிறது. முடியை அடர்த்தியாக வைத்திருக்கவும், கருமையாக வைத்திருக்கவும், ஆரோக்கியமாக வைத்திருக்கவும் இந்த அரிசி தண்ணீர் பயன்படுகிறது.
Rice wash for hair
பழங்காலங்களில் இந்த அரிசி தண்ணீரைத்தான் தலைமுடியை சுத்தம் செய்ய பயன்படுத்தியுள்ளனர். அதில் தாதுக்கள், வைட்டமின் பி, சி, ஆன்டி ஆக்சிடன்ட்டுகள், போலிக் அமிலம், மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் உள்ளன. தொடர்ந்து அரிசி தண்ணீரைப் பயன்படுத்தி வந்தால் தலைமுடி ஆரோக்கியமாக, வலுவாக, அடர்த்தியாக, கருமையாக இருக்குமாம்.
![Rice wash for hair 2 அரிசி கழுவிய தண்ணீர் நமது தலைமுடிக்கு பல நல்லது](https://thedalweb.com/wp-content/uploads/2022/08/large-HP_wet_hair_1024x1024.jpg)
Rice wash for hair – அரிசி தண்ணீரை எப்படி பயன்படுத்துவது
இந்த அரிசி தண்ணீரைத் தயாரிக்க வேறு எதுவும் தேவையில்லை, அரிசியும், தண்ணீரும் மட்டும் போதும். எளிதாகவும் இதை தயாரிக்கலாம். கை அளவு அரிசியை எடுத்து தண்ணீரில் கலந்து நன்றாக அலச வேண்டும். அரிசியில் உள்ள அத்தனை அழுக்குகளும் போகும் வரை கழுவவும். பின்னர் அந்த தண்ணீரை வடிகட்டி தனியாக ஒரு பாத்திரத்தில் ஊற்றவும். பிறகு அதை தனியாக வைக்கவும். தண்ணீர் வெள்ளை நிறத்திற்கு மாறி சற்று கெட்டியாகி விடும். பிறகு மீண்டும் வடி கட்டி, அதை 12 மணி நேரம் விட்டு வைக்கவும். அதன் பின்னர் பாட்டிலில் அதை அடைத்து வைத்து பயன்படுத்தலாம்.
![Rice wash for hair 3 அரிசி தண்ணீரை](https://thedalweb.com/wp-content/uploads/2022/08/rice.png)
பலன்கள்
அரிசி தண்ணீரில் வைட்டமினக்ள், அமினோ ஆசிடுகள் உள்ளன. இது தலைமுடிக்கு நல்லது. அதில் நியாசினும் உள்ளது. இது முடி அடர்த்தியாக்கும். கருமையாக்கும். தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும்.
அரிசி தண்ணீரில் முடியை கழுவும்போது முடி பளபளப்பாகவும் இருக்கும். சிக்கல் இல்லாமல் பளிச்சென இருக்கும். தூசியால் தலைமுடி பாதிக்கப்பட்டால் இதை வைத்துக் கழுவினால் போதும்.
தலைமுடி உதிர்வையும் இது தடுக்கிறது. தலைமுடி சிதையாமலும் பாதுகாக்கிறது. தலைமுடி வளரவும் உதவுகிறது. தலைமுடியை மீண்டும் வளர வைக்கவும் உதவுகிறது. வைட்டமின்கள் பி, சி, இ ஆகியவை இருப்பதால் முடி வலுவாகவும் இருக்கும்.
![Rice wash for hair 4 அரிசி தண்ணீரை](https://thedalweb.com/wp-content/uploads/2022/08/maxresdefault-1-1024x576.jpg)
அரிசி தண்ணீரில் இருக்கும் தாதுக்கள் முடியை மென்மையாக்க உதவுகின்றன. விரைவில் சிக்குப் பிடிக்காமல் காக்க உதவுகின்றன. சூரிய ஒளியில் நீ ண்ட நேரம் சுற்றித் திரிந்தாலும் கூட முடிக்கு பிரச்சினை வராமல் இது காக்கும்.
கை வசம் இப்படி ஒரு அருமையான வீட்டு மருத்துவம் இருக்கும்போது பாதிப்பை ஏற்படுத்தும் கெமிக்கல்களை நாடுவதைத் தவிர்ப்பது புத்திசாலித்தனமும் கூட.