நடிகை சங்கீதா கர்ப்பமாக இருக்கும் தகவலை தனது சமுக வலைதளப் பக்கங்களில் சில மாதங்களுக்கு முன்பு இந்த தம்பதி அறிவித்திருந்தனர்.
கடந்த மாதம் சங்கீதாவுக்கு வளைகாப்பு நடைபெற்ற புகைப்படங்களையும் தங்களின் சோசியல் மீடியா பக்கத்தில் போட்டிருந்தார்கள்.
இதனை தொடர்ந்து இந்த தம்பதிக்கு தற்போது பெண் குழந்தை பிறந்திருக்கிறது.

இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ரெடின் கிங்ஸ்லி, “உங்களின் வாழ்த்துகளுக்கும், ஆசீர்வாதங்களுக்கும் நன்றி. இளவரசி பிறந்திருக்கிறாள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
ரெடின் கிங்ஸ்லி – சங்கீதா தம்பதிக்கு திரைதுறையினர் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.