Ravi Mohan: "என் இளமையின் ரகசியம் இதுதான்" - நடிகர் ரவிமோகன் பகிரும் சீக்ரெட்!

Ravi Mohan: "என் இளமையின் ரகசியம் இதுதான்" – நடிகர் ரவிமோகன் பகிரும் சீக்ரெட்!


சென்னை ஈசிஆரில் ஒரு ப்யூட்டி பார்லர் திறப்பு விழாவுக்குச் சிறப்பு விருந்தினராக நடிகர் ரவிமோகன் கலந்துகொண்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “என்னுடைய ரெண்டு படங்கள் கராத்தே பாபு, பராசக்தி சூப்பரா போயிட்டு இருக்கு. ரெண்டு படத்தோட டீசர் பார்த்துட்டு நிறையப் பேர் வாழ்த்து சொன்னாங்க. நெருக்கமானவங்க போன் பண்ணி பேசுனாங்க. ரசிகர்கள்கிட்டயும் நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு. ரொம்ப மகிழ்ச்சி. இப்போ என்னுடைய முழு கவனமும் வேலையிலதான் இருக்கு. என்னுடைய ரசிகர்களைப் பெருமைகொள்ள வைப்பேன்.

1682999895 jayam ravi Thedalweb Ravi Mohan: "என் இளமையின் ரகசியம் இதுதான்" - நடிகர் ரவிமோகன் பகிரும் சீக்ரெட்!
ரவிமோகன்

என்னுடைய முதல் படத்துக்குதான் ப்யூட்டி பார்லர் போனேன். அதுக்கு அப்புறம் நான் முடிவெட்டிக்க மட்டும்தான் பார்லர் போவேன். என் இளமைக்குக் காரணமெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனா அறிவியல் பூர்வமான ஒரு காரணம் சொல்லலாம்… நான் நிறைய தண்ணீர் குடிப்பேன். காலை எழுந்ததும், இரவு தூங்கும்போதும் நிறைய தண்ணீர் குடிப்பேன். அது உடலை ஹைட்ரேட் பண்ணும். இதுதான் அந்த ரகசியம்னு நினைக்கிறேன். அதைத் தாண்டி வேற எதுவும் எனக்குத் தெரியவில்லை. இயக்குநர் சங்கர் இயக்கும் வேள்பாரி படத்தில் நான் நடிக்கிறேனா… அப்படி ஒரு தகவல் எனக்கே தெரியாது. எனக்கு எந்த செய்தியும் வரவில்லை” என்றார்.

vikatanwhatsappchennel Thedalweb Ravi Mohan: "என் இளமையின் ரகசியம் இதுதான்" - நடிகர் ரவிமோகன் பகிரும் சீக்ரெட்!

வணக்கம் வாசகர்களே விகடனின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுட சுட சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க விகடன் வாட்ஸ்அப் சேனலில் இணைந்திருங்கள்.

Click here: https://bit.ly/VikatanWAChannel



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *